பக்கம் எண் :

மனந்தூயார்க் கெச்சநன் றாகு மினந்தூயார்க்
கில்லைநன் றாகா வினை.

 

மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் -தூய மனத்தார்க்கு நன்மக்கட்பேறு உண்டாகும்; இனம் தூயார்க்கு நன்று ஆகா வினை இல்லை - தூய இனத்தையுடையார்க்கு எல்லா வினையும் கைகூடும்.

பெற்றோரைப்போற் பிள்ளைகளிருப்பதே பெரும் பான்மையாதலால் ' எச்ச நன்றாகும்' என்றும், நல்லினத்தோடெண்ணிச் செய்யும் வினை நன்றாய் முடியுமாதலால் 'இல்லை நன்றாகா வினை ' என்றும் கூறினார்.

இங்கு 'எச்சம்' என்பதற்குப் புகழ் என்றும் உரைகொள்வர், அடுத்த குறள் "இனநலம் எல்லாப் புகழுந் தரும்" என்று கூறுவதால், அவ்வுரை பொருந்துவதன்றாம்.