பக்கம் எண் :

நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.

 

அவர் அவர் பண்பு அறிந்து ஆற்றாக்கடை - அவரவர் சிறப்புக்குணங்களை ஆராய்ந்தறிந்து அவற்றிற்கேற்பச்செய்யாவிடின் ; நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு - வேற்றரசரிடத்து நல்ல ஆம்புடைகளைக் கையாளுமிடத்தும் குற்ற முண்டாம் .

இன் சொல்லுங் கொடையும் , ஏதும் வருத்தத்திற்கும் இழப்பிற்கும் இடமின்றி , எல்லார்க்கும் ஏற்றதும் இன்பந்தருவது மாயிருத்தலின் , நல்லாம்புடைகளாம் . அவற்றை அவரவர் பண்பறிந்தாற்றாமையாவது, அவற்றிற்கு உரியாரல்லாதாரிடத்துக் கையாளுதல் . 'தவறு' அவ்வினை முடியாமை அல்லது முடிந்தும் பயனின்மை .