பக்கம் எண் :

அடுக்கி வரினு மழிவிலா னுற்ற
விடுக்க ணிடுக்கட் படும்.

 

அடுக்கி வரினும் - இடைவிடாது துன்பங்கள் மேன்மேல் தொடர்ந்து வரினும்; அழிவு இலான் -மனங் கலங்காதவன்; உற்ற இடுக்கண் இடுக்கண் படும் -அடைந்த துன்பங்களே துன்பப்பட்டுப்போம்.

துன்பம் துன்பப்படும் என்பதில் ஆட்படையணி குறிப்பாக அமைந்துள்ளது. அடுக்குதல் என்பது ஒருவகைத் துன்பமும் பல வகைத்துன்பமும் தழுவும்.