இன்பத்துள் இன்பம் விழையாதான் - இயற்கை யாகவோ தன் முயற்சியாலோ தனக்கு இன்பம் வந்த விடத்து அதை நுகர்ந்தும் உள்ளத்தால் இன்புறாதவன்; துன்பத்துள் துன்பம் உறுதல் இலன் - அவ்விரு வழியிலும் தனக்குத் துன்பம் வந்த விடத்து அதை நுகர்ந்தும் மனத்தால் துன்பமுறுவதில்லை. இன்பமுந் துன்பமும் ஒன்றாகக் கொள்பவன் இன்பத்தால் இன்புறுதலும் துன்பத்தால் துன்புறுதலும் இல்லை என்பதாம்.
|