சொலல் வல்லன் - தான் சொல்லக் கருதியவற்றைப் பிறர்க்கேற்பச் சொல்லுதல் வல்லவனாய்; சோர்வு இலன் - அவை மிகப்பலவாயினும் எதையும் மறந்து விட்டு விடாதவனாய்; அஞ்சான் அவனை - அவைக்கு அஞ்சாதவனாயிருப்பவனை; இகல் வெல்லல் அரிது - தருக்கத்திலும் மாறுபாட்டிலும் வெல்லுதல் எவருக்கும் அரியதாம். ஏற்பச்சொல்லுதலாவது, கேட்பார்க்கு நன்மையல்லாவிடினும் மறுக்காது ஒத்துக்கொள்ளுமாறு சொல்லுதல். சோர்வுபடச் சொல்லுவதில் முறைபிறழச் சொல்லுதலும் தனக்குக் கேடாகச் சொல்லுதலும் அடங்கும். மாறுபாட்டில் வெல்லுதல், பிரித்தல் பொருத்தல் முதலிய வலக்காரங்களால் (தந்திரங்களால்) மேற்கொள்ளுதல். தருக்கம் சொல்லும், மாறுபாடு செயலும் ஆகும்.
|