பக்கம் எண் :

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
யில்லார்க ணில்ல தரண்.

 

அரண்-கோட்டையரணமைப்பு; எனை மாட்சித்து ஆகியக் கண்ணும்; மேற்சொல்லப்பட்ட வுறுப்புக்களெல்லா வற்றோடுங்கூடி எத்துணை மாட்சிமைப் பட்டதாயிருப்பினும்; வினைமாட்சி இல்லார் கண் இல்லது-போர்வினைச் சிறப்பில்லாதவரிடத்துப் பயன்படாததாம்.

வினைமாட்சியாவது வெற்றிக்கேதுவான பல்வேறு வினைத்திறமை. வினைமாட்சியின்மை கூறவே, குறைவினையோடு வினையின்மையும் மிகைவினையும் தகாவினையும் கடியப்பட்டனவாம். இருந்தும் பயன்படாமை அல்லது பயன்படுத்தப்படாமை இல்லாமையோ டொக்குமாதலின், 'இல்லதரண்' என்றார். உம்மை உயர்வு சிறப்பு. இவ்விரு குறளாலும் வினைமாட்சியின்றி அரண்மாட்சி பயன்படாமை கூறப்பட்டது. 'இல்லையரண்' என்பது மணக்குடவர் கொண்ட பாடம்.

உறுப்பியலின் மூன்றாம் பகுதியான அரணியல் முற்றும்.