பக்கம் எண் :

பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங் கமையாக் கடை.

 

கெழுதகைமை செய்த ஆங்கு அமையாக்கடை-நெடுங்கால நண்பர் தம் நட்புரிமையாற் செய்தவற்றிற்குத் தாமே அவற்றைச் செய்தாற்போல உடம்படாவிடின்; பழகிய நட்பு எவன் செய்யும்-பழைமையாக அவருடன் வந்த நட்பு என்ன பயன் படுவதாம்?

செய்தாற்போல வுடம்படுதலாவது தம்மையும் அவரையும் வேறுபடக் கருதாமை.