பழையார்கண் பண்பின் தலைப்பிரியாதார் - பழைமையான நண்பர் தவறு செய்தாராயினும் அவரிடத்துத் தம் நட்புத் தன்மையினின்றும் மாறுபடாதவர்; விழையார் விழையப்படுப - பகைவராலும் விரும்பப்படுவர். பண்பாவது நட்பிற் பிழைபொறுத்தல். மூன்றாம் வேற்றுமையுருபும் எச்சவும்மையும் தொக்கன.
|