பக்கம் எண் :

நகைவகைய ராகிய நட்பிற் பகைவராற்
பத்தடுத்த கோடி யுறும்.

 

நகை வகையர் ஆகிய நட்பின் - தாம் அறிவடையும் வகையினராகாது சிரித்து மகிழும் வகையினராதற்கு ஏதுவாகிய நட்பால் வரும் இன்பத்தினும்; பகைவரால் பத்து அடுத்த கோடி உறும்-பகைவரால் வருந்துன்பம் பத்துக்கோடி மடங்கு நல்லதாம்.

நகை வகையராக்குவார் பிறருக்கு அறிவூட்டாது அவரைச் சிரித்து மகிழவைப்பதையே தொழிலாகக்கொண்டு பொருள்பெறும் குறும்பர், காமுகர், நகை வேழம்பர் (கோமாளிக் கூத்தர்) முதலியோர். அவர் நட்பு மிகத்தீயது என்பது கருத்து. பத்தடுத்த கோடியுறும் என்பது வலியுறுத்தல் பற்றிவந்த உயர்வு நவிற்சி. ஆகியநட்பு ஆதற்கேதுவான நட்பு. 'நட்பு' ஆகுபொருளி. 'வருந்துன்பம்' என்பது அவாய்நிலையால் வந்தது.