இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் - தன் உள்ளத்தினாலெழும் மாறுபாட்டை ஏற்காது விடுதல் ஒருவனுக்கு ஆக்கந் தருவதாம்; அதனை மிகல் ஊக்கின் கேடு ஊக்குமாம் -அங்ஙமன்றி அதில் மேற்படுவதில் முனையின் , கேடும் அவனிடத்து வருவதில் முனையும். எதிர்சாய்தல் முன்விலகுதல் ஆக்கந்தருவதை ஆக்கமென்று கரணியத்தைக் கருமியமாகச் சார்த்திக் கூறினார்.'மிகலூக்கல்' ஒருசொற்றன்மைப்பட்ட செயப்படுபொருள் குன்றாவினை.
|