மாந்தர் - குடிப்பிறந்த மக்கள்; நிலையின் இழிந்தக் கடை - தம் உயர்ந்த நிலையினின்றும் ஒழுக்கக் கேட்டால் தாழ்ந்த விடத்து; தலையின் இழிந்த மயிர் அனையர் - தலையினின்று கழிந்த மயிரை யொப்பர். குடிப்பிறந்தார் தம் பிறப்பிற்குரிய பண்பாட்டு நிலையில் நின்ற விடத்து மதிக்கப்படுதலும், அதினின்று தவறியவிடத்து அவமதிக்கப்படுதலும், உவமத்தாற் பெறப்பட்டன. இழிதல் என்னும் சொல் கீழ் விழுதலையும் இழிவடைதலையும் இங்கு ஒருங்கே உணர்த்தும்.
|