15

(ப-ரை.) பகல்போலும் -ஞாயிறுபோலும், நெஞ்சத்தார் - மனமுடையார், பண்பு இன்மை - பண்பில்லா திருத்தல், இன்னா துன்பமாம்; நகை ஆய - நகுதலையுடைய, நண்பினார் - நட்பாளர்; நார் இன்மை - அன்பில்லா திருத்தல், இன்னா துன்பமாம்; இகலின் எழுந்தவர் - போரின்கண் ஏற்றெழுந்தவர், ஒட்டு - புறங்காட்டி யோடுதல், இன்னா - துன்பமாம்; நயம்இல் நீதியில்லாத, மனத்தவர் - நெஞ்சினையுடையாரது; நட்பு - கேண்மை, இன்னா - துன்பமாம் எ-று.

பகல்போலும் நெஞ்சம்- ஞாயிறு திரிபின்றி ஒரு பெற்றித்தாதல் போலத் திரிபில்லாத வாய்மையையுடைய நெஞ்சம்;‘ஞாயிறன்ன வாய்மையும்'என்பது புறம். இனி நுகத்தின் பகலாணி போல் நடுவுநிலை யுடைய நெஞ்சம் எனினும் பொருந்தும். "நெடுநுகத்துப் பகல்போல, நடுவு நின்ற நன்னெஞ்சீனோர்" என்பது பட்டினப்பாலை பண்பாவது உலகவியற்கை யறிந்து யாவரொடும் பொருந்தி நடக்கும் முறைமை. "பண்பெனப் படுவது பாடறிந்தொழுகல்" என்பது கலித்தொகைதூயமனமுடையரேனும் உலகத்தோடு பொருந்தி நடவாமை தீதென்பதாம் நகையாய நண்பீனார்நாரின்மையாவது, முகத்தால் நகுதல் செய்து அகத்தே அன்பு கருங்குதல். நயம் - நீதி யென்னும் பொருளதாதலைத் திருக்குறள் பரிமேலழகருரைநோக்கித் தெளிக; இனிமை யெனவும் விருப்பம் எனவும் பொருள் கூறலும் ஆம்.

9. கள்ளில்லா மூதூர் களிகட்கு நன்கின்னா
வள்ளல்க ளின்மை பரிசிலர்க்கு முன்னின்னா
வண்மை யிலாளர் வனப்பின்னா வாங்கின்னா
பண்ணில் புரவி பரிப்பு.

(ப-ரை.) கள் இல்லா - கள் இல்லாத, மூதூர் - பழைமையாகியஊர், களிகட்கு - கள்ளுண்டு களிப்பார்க்கு, நன்கு, இன்னா- மிகவுந் துன்பமாம்; வள்ளல்கள் - வள்ளியோர், இன்மை- இல்லா திருத்தல், பரிசிலர்க்கு - (பரிசில் பெறும்)இரவலர்க்கு, முன் இன்னா - மிகவுந் துன்பமாம்; வண்மைஇலாளர் - ஈகைக்குண மில்லாதவர்களுடைய, வனப்பு - அழகு,இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, பண் இல் -கலனையில்லாத, புரவி - குதிரை, பரிப்பு - தாங்குதல்இன்னா - துன்பமாம் எ-று.

களிகட்கு இன்னா என்றது எடுத்துக்காட்டுமாத்திரையே, களித்த லென்னுஞ் சொல் கள்ளுண்டு மகிழ்தல்என்னும் பொருளில் முன் வழங்கியது; இக் காலத்தேபொதுப்பட மகிழ்தல் என்னும் பொருளதாயிற்று. களி- கள்ளுண்போன்