11

(அவன்) முறை செலுத்துவோனாதல், (முன்னினிது) மிகவினிது ; யார் மாட்டும் - யாவரிடத்தும், எய்தும் திறத்தால் கூடியமட்டில், பொல்லாங்கு உரையாமை - (பிறர்மீது) குற்றங்கூறாமை, நன்குஇனிது - மிக வினிது, என்ப - என்பர் (மேலோர்)

கொலை பஞ்சமா பாதகங்களி லொன்றாகலின்‘கொல்லாமை முன்னினிது ' என்றார். ‘கோல் கோடி மாராயன் செய்யாமை ' என்பது பாடமென்ப. ‘ராயன்' என்னும் வடசொற்றிரிபு அக்காலத்து வழங்கக் காணாமையானும், ‘கோடி செய்யாமை ' என்னும் முடிபு நேரிதன்மை யானும், கோல் கோடிச் செய்யாமையே செங்கோல் னாகுதலாகலிற், கூறியது கூறல் என்னுங் குற்றம் நேர்தலானும் அது பாடமாகாதென்க. ‘மாராயம் -அரசனாற் செய்யுஞ் சிறப்பு ' என்பர் நச்சினார்க்கினியர், (பொருளதிகாரம், புறத் - 69). அரசன் தக்க காரணமின்றி விளையாட்டாக வேட்டமாடி உயிர்களைக் கொல்லுதலும், தன்கண் வினை செய்வார் பலருள்ளும் ஒருவன்மாட்டு விருப்புற்று நடுவு நிலைமை தவறி அவற்குரித்தாகாத சிறப்புகளைச் செய்தலும், மற்றொருவன் மாட்டு வெறுப்புற்று அவன்மீது குற்றஞ் சாற்றலும் கூடாவாம்; இவையின்றி நீதி செலுத்தல் இனிதென்பது கருத்தென்க. பொல்லாங்குரையாமையைச் சோர்வற மேற்கொள்ளுத லரிதென்பார், ‘எய்துந்திறத்தால்' என்றார். ‘கோல் கோடி' என்புழிக் கோலென்றது தராசுக்கோலை என்றுணர்க. செவ்விய கோலொத்தலின் ‘செங்கோல்'ஆயிற்றென்ப.

6. ஆற்றுந் துணையால் அறஞ்செய்கைமுன்இனிதே
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே
வாய்ப்புடைய ராகி வலவைகள் அல்லாரைக்
காப்படையக் கோடல் இனிது.

(ப-ரை.) ஆற்றுந் துணையால் - கூடிய மட்டும், அறஞ்செய்கை - தருமஞ் செய்தல், முன் இனிது - மிக வினிது ; பால்பட்டார் நன்னெறிப் பட்டார் , கூறும் - சொல்லும், பயம் மொழி - பயனுடைய சொல்லின், மாண்பு - மாட்சிமை, இனிது-; வாய்ப்பு உடையர் ஆகி (கல்வி, செல்வம், அதிகாரம், ஆண்மை முதலிய நலம் யாவும்) பொருந்துதலுடையவராய், வலவைகள் அல்லாரை நாணிலிகளல் லாதவரை, காப்பு அடைய கோடல் - காப்பாகப் பொருந்தக் கொள்ளுதல்,இனிது-.

அறமாவது நல்லன நினைத்தலும், நல்லன சொல்லுதலும், நல்லன செய்தலுமாம். ஆற்றுந்துணையாவது பொருளளவிற்கேற்பச் செய்தல்.