முண்டு ; அவர் ‘கைத்து' ‘பொருள்' என்பர், தான் ; அசை . ‘உயிர் சென்று படினும் என்புழி உடம்பின் தொழில் உயிர்மே லேற்றப்பட்டது;இஃது உபசார வழக்கு. 12. குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும் திருவுந்தீர் வின்றேல் இனிது. (ப-ரை.) குழவி - குழந்தைகள், பிணி இன்றி - நோயில்லாது, வாழ்தல் - வாழ்வது, இனிது -; கழறும் (சொல்லுதற்குரிய சபையினையறிந்து அதற்கேற்பச்) சொல்லுகின்ற , அவை அஞ்சான் - சபைக்கு அஞ்சாதவனுடைய , கல்வி - கல்வியானது, இனிது -; மயரிகள் அல்லராய் - மயக்கமுடைய ரல்லராய், மாண்பு உடையார் சேரும் - மாட்சிமையுடையாரை யடையும், திருவும் - செல்வமும் தீர்வு இன்றேல் - நீங்காதாயின், இனிது - . பாலக்கிரக தோடம் பட்சிதோடமுதலிய அப் பருவத் துணமையின் ‘ குழவி பிணியின்றி வாழ்த லினிதே ' எனவும் ; "உளரெனினும் இல்லாரோடொப்பர் களனஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார்" (குறள் - 730) என்றிருத்தலின், ‘கழறு மவையஞ்சான் கல்வி யினிதே' எனவும்: "பரீஇ யுயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா மரீஇப் பின்னைப் பிரிவு " (நாலடி - 220) என்றிருத்தலின் , ‘மாண்புடையார்ச் சேருந் திருவுந் தீர்வின்றேலினிது ' எனவுங் கூறினா ரென்க. ‘திருவும்'என்புழி உம்மை எச்சவும்மையாம். 13. மான மழிந்தபின் வாழாமை முன்இனிதே தான மழியாமைத் தானடங்கி வாழ்வினிதே ஊனமொன் றின்றி உயர்ந்த பொருளுடைமை மானிடவர்க் கெல்லாம் இனிது. (ப-ரை.) மானம் அழிந்த பின் - பெருமை கெட்ட பின், வாழாமை - (உயிர்) வாழாமை, முன் இனிது - மிக வினிது ; தானம் அழியாமை (தானிருந்து வாழும்) இருப்புச் சிதையாதபடி, தான்
|