நட்பாக்கிக் கொள்ளுதல், அதனின்-, முன் இனிது - மிக வினிது ; பற்பல தானியத்தது ஆகி - பற்பலவகை உணவுப் பொருள் களுடையதாய், பலர் உடையும் - (புறத்தார்) பலர் தோற்றம் கேதுவாகிய, மெய்துணையும் - மெய்க் காப்பு வீரரொடும், சேரல் - (அரண்) பொருந்துதல்,இனிது-. "நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல் (குறள் - 679) "கொற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் நிலைக்கெளிதாம் நீர தரண்" (குறள் - 745) "எல்லாப் பொருளும் உடைத்தா யிட நல்லா ளுடைய தரண்" (குறள் - 746) என்பவற்றின் பொருள் இப் பாவின்கண் அமைந்துகிடத்த லறிக. ‘ஒட்டாரை யொட்டிக் கொளல் ' என்பதற்குத் ‘தன் பகைவர் பிறரொடு கூடாமல் மாற்றிவைத்தல் எனினுமாம். ‘ அதனின்' ஐந்தனுருபு ஈண்டு உறழ்பொருளின் வந்ததென்க. உடையும் காரியத்தின்கண் வந்த பெயரெச்சமாதல் காண்க. 18. மன்றின் முதுமக்கள் வாழும் பதிஇனிதே தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பினிதே எஞ்சா விழுச்சீர் இருமுது மக்களைக் கண்டெழுதல் காலை இனிது. (ப-ரை.) மன்றின் - அம்பலத்தின்கண், முதுமக்கள் - அறிவுடையோர், வாழும் பதி - வாழ்கின்ற ஊர், இனிது-; தந்திரத்தின் - நூல் விதிப்படி , வாழும் தவசிகள், வாழ்கின்ற தவத்தோரது, மாண்பு - மாட்சிமை, இனிது-; எஞ்சா குறையாத, விழுச்சீர் - மிக்க சிறப்பினையுடைய , இருமுதுமக்களை தாய் தந்தையரை, காலை - காலையில், கண்டு - (அவர் இருக்குமிடஞ் சென்று) கண்டு, எழுதல் - (அவர் பாதங்களின் வீழ்ந்து) எழுதல்,இனிது-. மன்றமாவது ஊர் மன்றம்; அஃதாவது சபைகூடும் பொதுவிடம் மன்றத்து அறிவுடையார் வாழின், நீதி பெறப்படுதலின், ‘மன்றின் முதுமக்கள் வாழும் பதியினிதே' என்றார். தந்திரம் - நூல் ; அஃதிலக்கணையால் நூல்விதிக்காயிற்று. ‘கண்டொழுதல்' என்பது பாடமாயின், ‘அவரிருக்கு மிடத்திற் றொழுதல் ' என்றுரை செய்க.
|