33

அன்பு வையாத, வேந்தன், கீழ் - அரசன் கீழ், வாழாமை - வாழாதிருத்தல், முன் இனிது - மிக வினிது. தெற்றெனவு இன்றி - ஆராய்தலில்லாது, தெளிந்தாரை - (தன்கண்) வினையை வைத்தாற்கு, தீங்கு ஊக்கா - கெடுதி செய்யாத, பத்திமையின் - அன்புடைமையினும், பாங்கு இனியது - நன்றாக வினியது, இல் -இல்லை.

கூறுங்கால் இனிதன் றெனினும் , பயன் இனிதென்பார் ‘கருமப் பொருளினிதே'என்றார்.

அரசற்குக் குடிகண்மாட் டன்பில்லையாயின் குறை நீக்கலும் முறை செய்தலும் இலவாகலின், ‘பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன்னினிதே'என்றார்.

அரசன் ஒருவன் பிறப்புக் குணம் அறிவு என்பவற்றையும் செயலையும் காட்சி கருத்து, ஆகம் மென்னும் அளவைகளான் ஆராயாது அவன்கண் வினையை வைப்பின், அவன் அன்புடையனல் லாக்கால் கெடுதி செய்த லெளிதாகலின், ‘தெற்றென வின்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப், பத்திமையில் பாங்கினிய தில்' என்றார். ‘ஊக்காப் பத்திமை'என்புழிப் பெயரெச்சங் காரியத்தின்கண் வந்ததென்க.

33. ஊர்முனியா செய்தொழுகும் ஊக்கம் மிகஇனிதே
தானே மடிந்திராத் தாளாண்மை முன்இனிதே
வாய்மயங்கு மண்டமருள் மாறாத மாமன்னர்
தானை தடுத்தல் இனிது.

(ப-ரை.) ஊர் முனியா - ஊரார் வெறுக்காதனவற்றை, செய்து ஒழுகும் - செய்து வருகின்ற, ஊக்கம் - பெருமை, மிக இனிது-; தானே - (தலைவனாகிய) தானே, மடிந்திரா - (ஒரோ வழித் தாமத குணத்தான் யாவர்க்கும் வருகின்ற சோம்பலின் கண்) வீழ்ந்திராது, தாள் ஆண்மை - முயற்சியை யாளுந்தன்மை, முன் இனிது - மிக வினிது; வாள் மயங்கும் - வாட்கள் (நெருக்கத்தான் ஒன்றோடொன்று) கலக்கின்ற ,மண்டு அமருள் - மிக்க போரில், மாறாத - மீளாத, மாமன்னர் - பெருமையுடைய அரசர்களது, தானை - சேனைகள் (பொருதலை) , தடுத்தல் -ஓரரசன் விலக்குதல்,இனி்து-.

முனிதல் - வெறுத்தல், ஊர் முனிதல் - ஒருபடித்தாய் எல்லோரும் வெறுத்தல்.

"கடலி னஞ்சமு துண்டவர் கைவிட்டால்
உடலி னாற்கிடந் தூர்முனி பண்டமே”

(தேவாரம்)