37

"அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று "

(குறள் - 532)

ஆகலின் , சுற்றத்தைக் கண்டுழி அதன் நன்மை உசாவுதல் நன்றென்பார் ‘கிஞைர்மாட் டச்சின்மை கேட்ட வினிதே ' என்றார். இதற்குப் பிற பொருள் கூறுவாருமுளர். ‘ அச்சின்மையை' ‘க்ஷேமசமாச்சார ' மெனவும் ‘அச்சின்மை கேட்டலைக் ‘குகலப் ரச்ந' மெனவுங் கூறுப வடமொழி வாணர்.

‘தளிரியலாரை, விடமென் றுணர்த வினிது ' என்றமைக் கேற்பப் பிறரும்.

"அஞ்சனவை வேற்க ணரிவையர்தம் பேராசை
நெஞ்சு புகினொருவர் நீங்கு நிலைமைத்தோ
எஞ்சல்புரி யாதுயிரை யெய்ந்நாளு மீர்ந்திடுமால்
நஞ்சமினி தம்மவோர் நாளு நலியாதே "

(கந்தபுராணம் , மார்க்கண் - 24)

"உண்ணாதே யுயிருண்ணா தொருநஞ்சு
சனகியெனும் பெருநஞ் சுன்னைக்
கண்ணாலே நோக்கவே பருகியதே
யுயிர்நீயுங் களப்பட் டாயே "

(கம்ப. இராவணன் - 221)

எனக் கூறியிருந்த லுணர்க.

38. சிற்றா ளுடையான் படைக்கல மாண்பினிதே
நட்டா ருடையான் பகையாண்மை முன்இனிதே
எத்துணையும் ஆற்ற இனிதென் பால்படுங்
கற்றா உடையான் விருந்து.

(ப-ரை.) சிற்றாள் உடையான் - சிற்றாளுடையானது, படைக்கலம் - ஆயுதம் , மாண்பு இனிது - மாட்சிமைப்பட இனிது, நட்டார் உடையான் - சுற்றத்தாரை யுடையானது, பகை ஆண்மை - பகையையாளுந் தன்மை, முன் இனிது - மிக வினிது; பால் படும் - பால் மிகக் கறக்கும் , கன்று ஆ உடையான் - கன்றோடு பொருந்திய பசுவுடை யானது, விருந்து-, எ துணையும் - எல்லா வகையானும், ஆற்ற இனிது - மிக வினிது.

இளம் பருவத்தராகிய வீர ரில்வழிப் படைக்கலத்தாற் பயனின்மையின் , ‘சிற்றாளுடையான் படைக்கல மாண் பினிதே' எனவும், ‘ தம்பிய ரின்றி மாண்டு கிடப்பனோ தமையன் மண்மேல் '