திங்கள் மேவும் சடைத் தேவன் மேல்- சந்திரனைத் தாங்கியுள்ள சடைமுடியையுடைய தேவனாகிய சிவபிரான் மேல்; மார வேள் இங்கு நின்று எய்யவும் - மன்மதன். மலரம்புகளை இங்கு இருந்து எடுத்தெய்யவே; எரிதரு நுதல் விழி - நெருப்பைக் கக்கும் நெற்றிக் கண்ணில்; பொங்கு கோபம்சுட - பொங்கி எழுந்த சீற்றம் சுடுதலால்; பூளை வீ அன்ன தன் அங்கம்வெந்து - பூளைப் பூப்போன்ற தனது உடல் முழுதும் எரிந்து போய். அன்று தொட்டு அனங்கனே ஆயினான் - அந்த நாள் முதல் மன்மதன் அங்க மற்றவனே ஆய்விட்டான். திங்கள்: சந்திரன். சடைத்தேவன்: சிவபிரான். மாரவேன்: மன்மதன். ‘வேள்’ என்பதற்கு விரும்பத்தக்க அழகுடையவன் என்பது பொருள். நுதல் விழி: ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை. விழி: முதல் |