பக்கம் எண் :

252பால காண்டம்  

நிகழ்தல்:     நடத்தல்.  காவதம்:  காதம்  (பத்து நாழிகைத்  தூரம்).
அரவம்:   பேரொலி.   முனைவன்:   வினையின்    நீங்கி   விளங்கிய
மேலோன்.  முனைவன்:  மூத்தவன்   அனைவருக்கும்   முன்னோனான
முதல்வன். வினையற:  தீவினை  நீங்க (இருவினையும் நீங்க).  தோற்றல்:
நோன்பு.   நின்ற:   நற்குண   நற்பண்புகளில்   நினைத்த.  விளம்பல்:
சொல்லல்.  உற்றான்:  பொருந்தினான். ‘உறு’ என்று  பகுதி  இரட்டித்து
இறந்த காலம் காட்டிற்று.                                     4
 

398.‘மானச மடுவில் தோன்றி
   வருதலால். ‘’சரயு’’ என்றே
மேல் முறை அமரர் போற்றும்
   விழு நதி அதனினோடும்
ஆன கோமதி வந்து எய்தும்
   அரவம்அது’ என்ன. அப்பால்
போனபின். பவங்கள் தீர்க்கும்
   புனித மா நதியை உற்றார்.*

 

மானச   மடுவில்  தோன்றி  வருதலால்  -   மானசம்  என்னும்
பெயருடைய   மடுவிலே  தோன்றிப்  பெருகிவருதலால்;  சரயு என்றே
மேல்முறை  அமரர் போற்றும்  விழுநதி  
-  சரயு  என்னும்  பெயர்
கொண்டு      மேலாம்    முறையிலொழுகும்   தேவர்கள்   போற்றும்
விழுநதியாகிய; அதனினோடும் ஆன கோமதி வந்து எய்தும் அரவம்
அது என்ன
-  அந்த  நதியுடனே கோமதி என்னும் பெயருடைய ஆறு
வந்து   சேர்வதால்   உண்டாகும்   ஓசையே அது என்று விசுவாமித்திர
முனிவன் சொல்ல; அப்பால்  போனபின்  பவங்கள் தீர்க்கும் புனித
மாநதியை   உற்றார்   
-   அதற்கு  அப்புறம்  சென்றபின்  பிறவிப்
பிணியைப்   போக்க   வல்ல  புனிதமான ஒரு பெரிய நதியைச் சென்று
சேர்ந்தார்கள்.

மானசம்     என்ற மடு பிரமனது  மனத்தால்  தோன்றியதென்பதல்
இப்பெயர்  பெற்றது.  ‘சரசு’  குளம்  இதிலிருந்து  தோன்றியதால் சரயு
என்று   பெயர்   பெற்றது.  சரயுநதி  விழுமிய   நதியுமாம்.  கோமதி
மற்றொரு  ஆறு.  இரு  நதிகளும்  கூடும் இடமிது.  ‘எய்தும் அரவம்’
இந்த   இரண்டு  ஆறுகளும்  கலந்து  சேர்வதால்  உண்டாகும்  ஒலி
என்பது   பொருள்.  ‘புனிதமாநதி’  கௌசிகை  என்னும்   நதியாகும்.
‘பவங்கள்’ என்பதில் ’பவம்’ பிறப்பு.                            5
 

399.‘சுரர் தொழுது இறைஞ்சற்கு ஒத்த
   தூநதி யாவது’ என்று.
வரமுனிதன்னை. அண்ணல்
   வினவுற. மலருள் வைகும்
பிரமன் அன்று அளித்த வென்றிப்
   பெருந்தகைக் குசன் என்று ஓதும்
அரசர்கோன் மனைவி தன்பால்
   அளித்தவர் நால்வர் ஆகும்.*