பக்கம் எண் :

ஆறு செல் படலம் 581

வெகுண்டும் என்னினும்- மிகவும் (வெறுத்துக்) கோபிக்கிறோம் ஆனாலும்;
ஐயன் முனியும் ஆதலால்
-இராமபிரான் வெறுப்பான் என்ற காரணத்தால்;
என்று - என்று கருதி; நாம் போதும்- நாம் அவளை விட்டுப் போவோம்;
என்று அரிதின் கொண்டு - என்று சொல்லிச்சிரமப்பட்டு (அவனைத்
தடுத்து) அழைத்துக்கொண்டு;  போயினான் - சென்றான்.

     வெகுண்டும் - கோபித்தோம்;  தன்மைப் பன்மை வினைமுற்று. வேதம்
வல்ல நீ ஓர்அடிச்சியின் பொருட்டுச் சினம் கோடல் தகுதி அன்று என்று
குறிப்பித்தானாம்;  என்றது  பரதன்தாயைச் சீறாது விட்டதற்கு மேற்குறித்த
காரணத்தைச் சுட்டியது  எனலும் ஆம்.                           56

பரதன் இராமன் தங்கிய சோலையில் தங்குதல்  

2300. மொய் பெருஞ் சேனையும் மூரி ஞாலமும்
கைகலந்து அயல் ஒரு கடலின் சுற்றிட,
ஐயனும் தேவியும் இளைய ஆளியும்
வைகிய சோலையில் தானும் வைகினான்.

     மொய் பெருஞ் சேனையும் - நெருங்கிய பெரிய சேனையும்;  மூரி
ஞாலமும் -
பெருமை பொருந்திய அயோத்தி மக்களும்;  கைகலந்து -
ஒன்று திரண்டு; அயல் ஒருகடலின் சுற்றிட - பரதனின் பக்கல் ஒரு கடல்
போலச் சுற்றியிருப்ப;  ஐயனும் தேவியும்இளைய ஆளியும் வைகிய
சோலையில் -
இராமனும்,  சீதையும்,  இளைய யாளிபோல்வானாகிய
இலக்குவனும் தங்கியிருந்த அந்தச் சோலையிலேயே;  தானும் - (பரதன்)
தானும்;  வைகினான் - (அன்று) தங்கினான்.

     பரதன் இராமன் முதலில் தங்கியிருந்த சோலையில் தங்கினன் -
அன்பு கலந்துறவு கொண்டநெஞ்சம் உடையவர்களுக்குப் பயின்ற
பொருள்களைக் கண்ட வழி பயின்றாரையே கண்டாற் போலும்ஆதலின்
இராமன் தங்கிய சோலை  பரதனுக்குத் துயராற்றும் மருந்தாயிற்று. ஆளி -
உவமையாகுபெயர்.                                             57

இராமன் தங்கிய புல்லனை அருகில் மண்ணில் பரதன் இருத்தல்  

2301.அல் அணை நெடுங் கணீர் அருவி ஆடினன்,
கல் அணை கிழங்கொடு கனியும் உண்டிலன்,
வில் அணைந்து உயர்ந்த தோள் வீரன் வைகிய
புல் அணை மருங்கில், தான் பொடியின் வைகினான்.

     (பரதன்) அல்- இரவில்; நெடுங்கண் அனை நீர் அருவி ஆடினன்-
(தன்)நீண்ட கண்களிலிருந்து  வருகின்ற நீராகிய அருவியில் மூழ்கி; கல்
அணை கிழங்கொடு கனியும்உண்டிலன் -
மலையில் விளையும்
கிழங்குகளோடு பழங்களையும் புசியாது;  வில் அணைத்து