பக்கம் எண் :

சூர்ப்பணகைப் படலம் 195

சென்று அந்த அழகிய சோலையிலுள்ள பன்ன சாலைக்குள் புகுந்தான்.

     கல் நீரிலே கிடப்பினும் அதன் ஈரத்தைப் பெறாதிருக்கும் அது போல்
அரக்கரும் இரக்கமற்ற பண்பினராம். 'வைகலும் நீருட்கிடப்பினும் கல்லிற்கு
மெல்லென்றல் சால அரிதாகும் - அஃதே போல வைகலும் நல்லறம்
கேட்பினும் கீழ்கட்குக் கல்லினும் வல்லென்னும் நெஞ்சு' (அறநெறிச் சாரம்
51) என்ற பாடலின் கருத்தை இத்துடன் ஒப்பிடலாம்.

     தொடர்பு இலாதேம் குலம், கல்வி, பிறப்பு, பண்பு முதலிய
எவ்வகையிலும் தொடர்பு இல்லாதவர்கள். கள்ள வாசகங்கள் - வஞ்சகச்
சொற்கள். மின்னலும் மேகமும் இணைந்த கருத்தினை ஒட்டி முன்னரே
'பருவக்கால மஞ்சிடை வயங்கித் தோன்றும் பவளத்தின் வல்லி' (2797) என
வருதல் காண்க. மிதிலையை மிதி என்ற மன்னன் ஆண்டதால் அந்நகருக்கு
இப்பெயர் வந்தது. பொன் - தன்மையாலும் அருமையாலும் சுடச் சுட
ஒளிர்வதாலும் சீதைக்கு ஒப்பாயிற்று. பிற மாதரைச் சிந்தையாலும்
தீண்டாததால் இராமன் புனிதன் எனப்பட்டான். இதில் உவமை அணி
உளது.                                                     69

சூர்ப்பணகை மனம் நைந்து ஏகுதல்

2801.புக்க பின், போனது என்னும் உணர்வினள்;
     பொறையுள் நீங்கி
உக்கது ஆம் உயிரள்; ஒன்றும்
     உயிர்த்திலள்; ஒடுங்கி நின்றாள்;
தக்கிலன்; மனத்துள் யாதும் தழுவிலன்;
     சலமும் கொண்டான்;
மைக்கருங் குழலினாள்மாட்டு அன்பினில்
     வலியன்' என்பாள்.

    புக்கபின் - (இராமனும் சீதையும் பன்னசாலையுள்) சென்ற பின்னர்;
போனது என்னும் உணர்வினள் - போயிற்று என்று கூறுதற்குரிய அறிவு
நீங்கியவளாய்; பொறையுள் நீங்கி உக்கது ஆம் உயிரள் -
உடம்பிலிருந்து நீங்கி உதிர்த்து விட்டதான உயிர் உடையவளாய்; ஒன்றும்
உயிர்த்திலள் ஒடுங்கி நின்றாள் -
சிறிதும் மூச்சு விடவும் மாட்டாமல்
ஒடுங்கி நின்று; தக்கிலன் மனத்துள் யாதும் தழுவிலன் - மனத்தில்
தகுதிக் குணமில்லாதவனும் (காமுற்ற என்னிடம்) யாதொரு உதவி
செய்யாதவனுமாகி; சலமும் கொண்டான் - தணியாச் சினம்
கொண்டுள்ளான்; மைக்கருங் குழலினாள் மாட்டு அன்பினில் வலியன்
என்பாள் -
மை போன்ற கரிய கூந்தலுடையவளிடத்து (இவன்) அன்பு
காட்டுவதில் உறுதியுள்ளவன் என்று எண்ணியவளாய்.

     பொறை - சுமை போலுள்ள உடல், உயிரைப் பொறுத்துக்
கொண்டுள்ள உடல் எனலும் ஆம். தக்கிலன் - தகவிலன்
(திருக்கோவையார் 376 கொளு). சலம் - தணியாச் சினம். அன்பினில்
வலியன் - தளராத அன்புடையவன் எனலுமாம். இராமன் பன்ன
சாலைக்குள் சென்றவுடன் அறிவு ஒழிய, உயிர்ப்பு ஒடுங்க, செயல், அடங்க,
உயி்ர் நீங்கினாற் போன்று மூர்ச்சித்துப் பின் தெளிந்து பலவாறு
எண்ணினாள். இது சூர்ப்பணகையின்