நடை வேகத்தால்); வாத விசையில் - காற்றின் விசையால்; பஞ்சு பட்டது பட - பஞ்சடையும் நிலையை அடையும் படி; படியின்மேல் முடுகி - நிலத்தின் மீது விரைந்துநடந்து; ஏ - அசை. விராதன் நஞ்சுபோல் கொடுமையும் மலைபோல் வலிய தோற்றமும் கொண்டவன். அவன் நடைவேகத்தால் எதிர்ப்படு மலைகள். பஞ்சுபோல் சிதறிப் பறந்தன. தாடகை வருகையையும் இவ்வாறே‘கிரிகள் பின் தொடர வந்தாள் (368) _ என்பார்._நஞ்சு வெற்புருவு பெற்றிடை நடந்தது என்பது இல்பொருளுவமை. செனியன் - சென்னியன், இடைக்குறை. 6 | 2523. | புண் துளங்கியன கண்கள் கனல் பொங்க, மழை சூழ் விண் துளங்கிட, விலங்கல்கள் குலுங்க, வெயிலும் கண்டு, உளம் கதிர் குறைந்திட, நெடுங் கடல் சுலாம் மண் துளங்க, வய அந்தகன் மனம் தளரவே. |
புண் துளங்கி அன கண்கள் - புண்கள் துடிப்பது போன்ற கண்களில்; கனல் பொங்க - நெருப்புப் பொறி பறக்க; மழைசூழ் விண் துளங்கிட - மேகம் சூழ்ந்த வானம் நடுங்க; விலங்கல்கள் குலுங்க - மலைகள் நடுங்கிட; வெயிலும் - கதிரவனும்; கண்டு - பார்த்து; உளம் கதிர்குறைந்திட - மனம் ஒளி கெட; நெடுங்கடல் சுலாம்- பெரியகடல் சூழ்ந்த; மண்துளங்க- நிலம் நடுங்க; வய அந்தகன் - வலிமையுடைய யமனும்; மனம் தளர - உள்ளம் தளர்ச்சி அடைய; ஏ - அசை. கண்ணில் கனல் பொங்குவது புண்ணில் செந்நிறம் விளங்குவது போன்றது, வெயில், மழை -ஆகுபெயர். அந்தகன் - உயிர்களுக்கு முடிவை உண்டாக்கும் கண்ணற்றவன். 7 | 2524. | புக்க வாள் அரி முழங்கு செவியின் பொறிஉற, பக்கம் மின்னும் மணி மேரு சிகரம் குழைபட, செக்கர் வான் மழை நிகர்க்க, எதிர் உற்ற செருவத்து உக்க வீரர் உதிரத்தின் ஒளிர் செச்சையி னொடே |
|