பக்கம் எண் :

166கிட்கிந்தா காண்டம்

 நீதியாய்! நினைந்தனென்'
      என, நிகழ்த்தினான்;
'சாது ஆம்' என்ற, அத்
      தனுவின் செல்வனும்,
'போதும் நாம் வாலிபால்'
      என்ன, போயினார்.

     ஆதலால் -'ஆதலால்';நீதியால் -நீதிநெறியை உடையவனே!
அன்னதே -முன்னர் வாலியைக் கொன்று வானரப் படைகளைக் கொண்டு
சீதையைத் தேடி அறிவதே;அமைவது ஆம் என -பொருத்தமான
செயலாகும் என்று;நினைந்தனென்-எண்ணுகிறேன்';என நிகழ்த்தினான்-
என்று அனுமன் கூறினான்;சாது ஆம் என்ற -நின் கருத்து ஏற்கத் தக்கதே
என்று கூறிய;அத்தனுவின் செல்வனும் -அந்த வில்வீரனாகிய இராமனும்;
நாம் வாலி பால் போதும் -
'நாம் வாலி இருக்குமிடம் போவோம்';என்ன-
என்று கூற;போயினர் -அவர்கள் அனைவரும் அங்குச் சென்றார்கள்.

     மேலே 29வது பாடலில் கூறிய செய்தியையே இப்பாடலில் 'அன்னது'
எனச் சுட்டப்பட்டது.  வாலியைக் கொன்று, படை திரட்டிச் சீதையைத்
தேடுதலே ஆண்டுச் சுட்டிய பொருளாகும்.  சாது - நல்லது, ஏற்கத்தக்கது,
உடன்பட்ட எனும் பொருளில் அமைவது.  ''சாதுவாய் நின் புகழின்
தகையல்லால் பிறிதில்லை'' (திருவாய்மொழி. 3-1-6).  ''சாது என்று
உணர்கிற்றியேல்'' (5895) எனப் பின்னரும் கூறுவார்.  தனுவின் செல்வன் -
இராமன்.  இராமன் வில்லாற்றலைக் குறிக்கும் தொடர்.  முதலடி
முற்றுமோனை.                                                 34