பக்கம் எண் :

62கிட்கிந்தா காண்டம்

மாடு -போர்செய்தற்குரிய சீற்றத்தை உடைய மன்னன் சுக்கிரீவனிடம்;
அணுகினான் -
வந்தடைந்தான்.

     அனுமன் தான் சென்ற காரியம் செவ்வனே முடிந்தது என்பதைக்
குறிக்கும் வகையில் 'யானும் என் குலமும் இவ்வுலகும் உய்ந்தனம்' என்றான்.
தான் முதலில் சென்று இராமலக்குவரைக் கண்ட சிறப்பால் 'யானும்' என
முதலில் தன்னைத் தனியே கூறினான்.  வாலியை வென்று வானரக்
கூட்டத்தைப் பிழைக்கச் செய்வான் என்பதால் 'என் குலமும்' என்றும்
அரக்கர் அழிதல் உறுதி என்பது தோன்ற 'இவ்வுலகும் உய்ந்தனம்' என்றும்
கூறிச் சென்றான்.

     அன்பு, அருள், இன்சொல், நேர்மை, அழகு என இராமனிடம் அனுமன்
கண்ட குணங்கள் பலவாதலின் 'குணமெலாம்' என்றார்.  அவற்றையே
நினைத்துக் கொண்டமையால் 'நினைந்து' என்றும், நல்ல பண்புகளை மறவாது
நினைக்கும் நல்ல அறிவு உடையனாதலின் 'மாமதியினான்' என்றும் கூறினார்.
மனுவின் வழித் தோன்றல் இராமன் ஆதலின் 'மானவன்' எனக்குறித்தார்.
அனுமனின் தோளுக்கு மந்தரமலை உவமை ஆதலை 'தேவருக்கு அமுதல்
ஈந்த குன்றென . . . குவவுத்தோளான் (4934) என்ற அடியும் அவன்
'நெடும்புகழினான்' என்பதை 'ஊழிதோறும் புதிதுஉறுஞ் சீர்த்தியான்' (5168)
என்ற அடியும் உணர்த்தும்.  அனுமனை 'நல்லறிவாளன் எனப் பின்வரும்
கூறுவது காண்க. (4808).

     அரசன் மாடு - மாடு ஏழனுருபு இடப்பொருளில் வந்தது.          1

3787.மேலவன்,திருமகற்கு உரை
     செய்தான், 'விரை செய் தார்
வாலி என்ற அளவு இலா
     வலியினான் உயிர் தெறக்
காலன் வந்தனன்; இடர்க்
     கடல் கடந்தனம்' எனா,
ஆலம் உண்டவனின் நின்று,
     அரு நடம் புரிகுவான்.

     ஆலம் உண்டவனின் நின்று -(அனுமன்) ஆலகால நஞ்சு உண்ட
சிவபெருமானைப்போல நின்று;அருநடம் புரிகுவான் - அரிய நடனம்
ஆடுபவனாய்;விரை செய் தார்- வாசனை மிக்க மாலையை உடைய;வாலி
என்ற அளவு இலா -
வாலி என்று சொல்லப்படும் அளவில்லாத;
வலியினான்-
வலிமை உடையவனின்;உயிர்தெற-உயிரை அழிக்க;காலன்
வந்தனன் -
யமன் வந்துவிட்டான்;இடர்க்கடல் கடந்தனம் - (ஆதலால்)
நாம் துன்பக்கடலைக் கடந்து விட்டோம்;எனா -என்று;மேலவன்
திருமகற்கு
- வானத்தில் செல்லும் சூரியனின் மகனான சுக்கிரீவனுக்கு;உரை
செய்தான் -
உரைத்தான்.

     சூரியன் விண்ணில் இயங்கும் சிறப்புப்பற்றி 'மேலவன்' எனப்பெற்றான்.
வாலியின் ஏவலின் வருபவராக எண்ணியதற்கு மாறாக, அவனைக் கொல்லும்
யமன் போன்று இராமலக்குவர் வந்துள்ள செய்தியை மகிழ்ச்சியால்ஆடிக்
கொண்டே அனுமன் சொன்னான் என்பதாம்.  அவன் சிவபெருமான்
அமிசமாய்