பக்கம் எண் :

330சுந்தர காண்டம்

    புக்கவழி - புகுந்த மரபு (தசரதன் மரபு) போந்த வழி -பிறந்த மரபு
(சனகன் மரபு) சிக்க - உறுதியாக. அரக்கர் இயல்பு தெழித்துப் பேசுதல்
போலும். நாவரசர், இராவணனை திண்ணமாத் தெழித்து நோக்கி உணரா
ஆண்மையான், என்று இராவணப் பதிகத்தில் பேசுவார் (தேவாரம் 34).
(156)

5225.

கொல்வான் உற்றோர் பெற்றியும், - யாதும்
                            குறையாதாள்-
‘வெல்வான், நம்கோன்; தின்னுமின்; வம்!’என்பவர்
                            மெய்யும்,
வல் வாய்வெய்யோன் ஏவலும், எல்லாம் மனம்
                            வைத்தாள்,
நல்லாள்; நல்லகண்கள் கலுழ்ந்தே நகுகின்றாள்.

     யாதும்குறையாதாள் - எத்துன்பத்தாலும் மனம்குறையப் பெறாத;
நல்லாள் -
பிராட்டி; கொல்வான் - கொல்லும் பொருட்டு; உற்றோர்
பெற்றியும் -
அணுகிய சில அரக்கிகளின் தன்மையையும்; நம்கோன் - நம்
தலைவனான இராவணன்; வெல்வான் - வெற்றியடைவான் (ஆகையால்);
தின்னுமின் -
இவளைத் தின்னுங்கள்; வம் - வாருங்கள்; என்பவர்
மெய்யும்-
என்று கூறிய சில அரக்கியர்களின் உடற்பருமனையும்; வல்வாய்
-
கொடியமொழிபேசும்; வெய்யோன் - கொடிய இராவணனின்; ஏவலும் -
கட்டளையையும்; எல்லாம் - யாவற்றையும்; மனம் வைத்தாள் - மனத்திலே
எண்ணிப் பார்த்து; நல்ல கண்கள் கலுழ்ந்து - நல்ல கண்களில் கண்ணீர்
ததும்பி; நகுகின்றாள் - சிரிப்பவளானாள்.

    பெற்றியும்,மெய்யும், ஏவலும் எல்லாம் மனம் வைத்தாள் கலுழ்ந்து
நகுகின்றாள். வல்வாய் வெய்யோன் - எமன். ஏவலில் - அவன் தூதரைப்
போல் என்பது பழையவுரை (அடை - பதி). நகுதல் - துயரம் மிகுதியால்
வந்தது. கலுழ்தல் - கலங்குதல் - அழுதல். கண்தாம் கலுழ்வது எவன்கொல்
என்பது வள்ளுவர் தந்த தொடர். (157)

திரிசடைசொல்லால் சீதை தேறுதல்

5226.

இன்னோரன்ன எய்திய காலத்து, இடை நின்றாள்,
‘முன்னேசொன்னேன் கண்ட கனாவின் முடிவு,
                                   அம்மா !