பக்கம் எண் :

366சுந்தர காண்டம்

இரணியன் என்றுசிறப்பிக்கப்படுபவன்; வச்சிர யாக்கையை - வச்சிரம்
போன்ற உடலை; வகிர்ந்த - பிளந்தன; வன்தொழில் - அந்தக்
கொடுந்தொழில்; நிச்சயம் - உறுதியாக நிகழ்ந்தது; அன்று எனின் -
அச்செயல் உண்மையல்ல என்றால்; ஐயம் - அந்த ஐயப்பாட்டை; கைச்செறி
-
கையின்கண் செறிந்துள்ள; முகிழ் உகிர் - அரும்பு போன்ற நகம்; நீக்கும்
-
போக்கும்.

     அமைதியானநிலையில் உள்ள பெருமானை நோக்குபவர்களுக்கு
‘இவனா மார்பைப் பிளந்தான்’ என்று ஐயம் தோன்றும் அந்த ஐயத்தை விரல்
நகம் போக்கும் என்க. சாந்தவடிவமான திருமாலை நோக்கும் போது
ஆழ்வாருக்கே இவன் வயிரமார்பைப் பிளப்பானா என்னும் ஐயம் தோன்றிற்று.
அவர், இவையா பிலவாய் திறந்து எரிகான்ற, இவையா எரிவட்டக் கண்கள்,
என்று ஐயுற்றார். (நான்முகம் 21) ஐயத்தைக் ‘கூருகிர் நீக்கும்’ என்று
குறித்தனர் கம்பநாடர். பாசுர விதை கற்பனைக்கு இடம் தந்தது. விரல்
கூர்மையும் செந்நிறமும் பெற்றுள்ளது. ஆதலால் ஐயம் வேண்டாஎன்பது
தற்குறிப் பேற்றம். நரசிம்மமே இராமன் என்பது குறிப்பு.            (48)

5276.

‘திரண்டில;ஒளி இல; திருவின் சேர்வு இல;
முரண் தரு மேருவில் முரிய மூரி நாண்
புரண்டில; புகழ் இல; பொருப்பு என்று ஒன்று
                               போன்று
இரண்டு இல;புயங்களுக்கு உவமம் ஏற்குமோ ?*

(தோள் மலைகள்போன்றது எனின்)

     பொருப்பு -மலைகள்;திரண்டில - திரட்சியைப் பெறவில்லை; ஒளி
இல -
ஒளியைப் பெறவில்லை; திருவின் சேர்வு இல - திருமகளின் சார்பு
இல்லை; முரண்தரு - வலிமைமிக்க; மேருவில் முரிய - மேருவாகிய வில்
இற்றுப் போக; மூரி நாண் புரண்டில - வலியநாண் புரளப் பெறவில்லை;
புகழ்இல - புகழைப் பெறவில்லை; ஒன்று போன்று என்று - ஒன்று
ஒன்றைப் போல; இரண்டில - இரண்டு கிடையாது; (ஆதலின் மலைகள்)
புயங்களுக்கு - இராமபிரானின் தோள்களுக்கு; உவமை - ஒப்புமை;
ஏற்குமோ - பொருந்துமோ ?

     பொருப்பு, இல்,புயங்களுக்கு உவமை ஏற்குமோ’ என்று முடிக்க.
பொருப்பு - எழுவாய்.                                         (49)