விழுங்குவதற்குஆயத்தமாக நின்றாள்; அது வீரன் நோக்கி - அவள் செயலை அனுமன் பார்த்து; திக்கு ஆர் அவள் வாய் - திசைகளைப் பொருந்திய அவளுடைய வாயானது; சிறிதாம் வகை - சிறிதாகும்படி; சேணில் நீண்டான் - ஆகாயத்தில் படிப்படியாக வளர்ந்தான். அரக்கியின்வாய் திசைகளின் எல்லையில் இருந்தது. அனுமன் பேருரு வானையளாவி இருந்தது. புழை - குகை. மேருப் புழை என தொக்கு அடங்கித் துயில்தரு கண்ணினான். (யுத்த - கும்ப 68) அரக்கியும் இதில் உள்ள உம் - அசை புக்காலும் என்பதிலுள்ள உம்மை தொக்கு புக்கால் என வந்துள்ளது. (70) | 4811. | நீண்டான்உடனே சுருங்கா நிமிர்வாள் வயிற்றின் ஊண்தான் எனஉற்று ஓர் உயிர்ப்பு உயிராதமுன்னர் மீண்டான் அதுகண்டனர் விண்உறை வோர்கள் எம்மை ஆண்டான்வலன்என்றுஅலர் தூஉய் நெடிது ஆசிசொன்னார். |
நீண்டான் -வளர்ந்துஉயர்ந்த அனுமன்; உடனே சுருங்கா - சடக்கெனத் தன்னைச் சுருக்கிக் கொண்டு; நிமிர்வாள் வயிற்றின் - ஓங்கி வளர்ந்த சுரசையின் வயிற்றில்; ஊண்தான் என உற்று - உணவு என்று சொல்லும்படி பொருந்தி; ஓர் உயிர்ப்பு உயிராத முன்னர் - அவள் ஒரு மூச்சு விடுவதற்கு முன்; மீண்டான் - வெளி வந்தான்; விண் உறைவோர்கள் - தேவர்கள்; அது கண்டனர் - அச் செயலைப் பார்த்தனர்; எம்மை ஆண்டான் வலன் என்று - எம்மைப் பாதுகாக்க வந்த அனுமன் வல்லமை உடையவன் என்று; அலர் தூஉய் நெடிது ஆசி சொன்னார் - மலர் தூவி நீண்ட ஆசி கூறினார்கள். நெடிது வளர்ந்துஉடனே சுருங்கி வயிற்றில் நுழைந்து வெளி வந்தது அனுமனது சாதுர்யத்தையும் வல்லமையையும் உணர்த்தியமையால் தேவர் மகிழ்ந்தனர். (71) அனுமன் செயலைநோக்கிய தேவர்கள் வாழ்த்துக் கூறல் | 4812. | மின்மேற்படர் நோன்மையனாய் உடல் வீக்கம்நீங்கி |
|