பக்கம் எண் :

பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்617

5667.

‘தானையும் உலந்தது; ஐவர் தலைவரும் சமைந்தார்;
                                   தாக்கப்
போன பின் மீன்வேம் யாமே; அதுவும் போர்
                                 புரிகிலாமை;
வானையும்வென்றுளோரை வல்லையின் மடிய நூறி,
ஏனையர் இன்மை,சோம்பி இருந்தது, அக் குரங்கும்’
                                 என்றார்.

     தானையும் உலந்தது- சேனையும் அழிந்தது; ஐவர் தலைவரும்
சமைந்தார் -
தலைவர்களான ஐந்து சேனாபதிகளும் இறந்தனர்; தாக்கப்
போனபின் -
போர் செய்யப் போன பிறகு; யாமே மீள்வேம் - யாங்கள்
தாம்மீண்டவர் ஆவோம்; அதுவும் போர் புரிகிலாமை - அவ்வாறு
மீண்டதும்நாங்கள் போரிட முடியாமல் இருந்ததால்தான்; அக்குரங்கும் -
அந்தக்குரங்கும்; வானையும் வென்றுளோரை வல்லையில் மடிய நூறி -
வானுலகத்தையும் வெற்றிகொண்டவர்களாகிய பஞ்ச சேனாபதிகளை விரைவில்
கொன்றழித்து; ஏனையர் இன்மை - மற்றும் போர் செய்வோர் இன்மையால்;
சோம்பி இருந்தது என்றார் - செய்தொழில் இல்லாமல் சோம்பல்
மேற்கொண்டிருந்தது என்று கூறினார்கள்.

     பஞ்சசேனாபதிகள் இறந்ததை இராவணனிடம் தெரிவித்தவர்கள்,
போரிடமுடியாமல் பதுங்கியிருந்த அரக்கர்கள் என்றுதெரிகின்றது. ‘போர்
புரிகிலாமை’என்ற தொடரில் ‘கில்’ என்பது ஆற்றலை உணர்த்தும் இடைச்
சொல்லாகும்.ஆகையால் உயிர் தப்பியவர்கள் போர் புரிய இயலாதவர்
என்பது தெரிகிறது.                                           (67)