பக்கம் எண் :

இலங்கை எரியூட்டு படலம்793

5950.

நீலம்நின்ற நிறத்தன, கீழ் நிலை
மாலின் வெஞ்சின யானையை மானுவ;
மேல் விழுந்துஎரி முற்றும் விழுங்கலால்
தோல் உரிந்துகழன்றன, தோல் எலாம்.

     நீலம் நின்றநிறத்தன - கருநிறம்பொருந்தியனவாய் இருந்த; தோல்
எலாம் -
யானைகள் எல்லாம்; மேல் எரி விழுந்து முற்றும் விழுங்கலால்
-
தம்மீது நெருப்பு விழுந்து உடம்பு முழுவதும் பற்றிக் கொண்டதனால்; தோல்
உரிந்து கழன்றன -
தோல்கள் உரிந்து நீங்கப் பெற்றவையாய்; கீழ் நிலை
மாலின் -
கிழக்குத் திசையில் உள்ள இந்திரனுடைய; வெம்சின யானையை
மானுவ -
கொடிய கோபத்தோடு கூடிய ஐராவதம் என்னும் (வெள்ளை)
யானையை ஒத்தனவாயின.

    தீப்பற்றியதனால் தோல் உரிந்து வெள்ளெலும்பு தோன்ற நின்ற
யானைகள், இந்திரனுடைய ஐராவதம் என்ற வெள்ளை யானையை
ஒத்திருந்தன என்க. மால் - இந்திரன்.                           (8)

5951. 

மீது இமம்கலந்தாலன்ன வெம் புகை,
சோதி மங்கலத்தீயொடு சுற்றலால்,
மேதி மங்குலின்வீழ் புனல், வீழ் மட
ஓதிமங்களின்,மாதர் ஒதுங்கினார்.

     மீது இமம்கலந்தால் அன்ன வெம்புகை - மேலே பனி கலந்தது
போல் தோன்றும் கொடிய புகை; சோதி மங்கலம் தீயொடும் சுற்றலால் -
ஒளியுள்ள மங்களகரமான நெருப்பினுடன் சூழ்ந்து கொண்டதனால்,; மேதி -
(அஞ்சிய) எருமைகள்; மங்குலின் - மேகத்தைப் போன்று; வீழ் புனல் வீழ்
-
விரும்பத்தக்க நீர் நிலைகளில் விரைந்து விழ; மாதர் - (அங்கு விளையாடிக்
கொண்டிருந்த) மகளிர்கள், (எருமைகள் விழுதலால் அஞ்சி); மட ஓதி
மங்களின் ஒதுங்கினர் -
இளமையான அன்னங்களைப் போல அவ்விடத்தை
விட்டு நீங்கினார்கள்.

    வீழ் -விருப்பம்; இரண்டாவது ‘வீழ்’ என்பது ‘வீழ’ என்பதன் வீகாரம்.
இமம் - பனி; மேதி - எருமை; மங்குல - மேகம்; ஓதிமம் - அன்னப் பறவை.
                                                          (9)

5952.

பொடித்துஎழுந்து பெரும் பொறி போவன
இடிக் குலங்களின்வீழ்தலும், எங்கணும்