ஊட்டப்பட்டது போலச் சிவந்த; ஒண்கணான் - ஒளிமிக்க கண்களை உடையவனாயினான். |
கோட்டிய - கோடுதலைஉடைய (நேர்மையில்லாத). மூட்டிய - மூட்டப்பட்ட. உருகிய அரக்கு ஊட்டப்பட்டது போன்ற சிவந்த கண்களை உடையவன் என்பதனை "ஊட்டக் கூட்டிய அனைய ஒண்கணான்" என்றார். முடுகுதல் - விரைதல். |
(1) |
6366. | ' "இரணியன் என்பவன் எம்மனோரினும் |
| முரணியன்; அவன்தனை முருக்கி முற்றினான், |
| அரணியன்" என்று, அவற்கு அன்பு பூண்டனை - |
| மரணம் என்று ஒரு பொருள் மாற்றும் வன்மையோய் ! |
|
மரணம் என்று ஒரு பொருள் - (சினந்த ராவணன் வீடணனைப் பார்த்து) மரணம் என்ற சொல்லின் பொருளையே; மாற்றும் வன்மையோய்- மாற்றிய வலிமை உடையவனே !; இரணியன் என்பவன்- இரணியன் என்ற பெயர் கொண்ட அவன்; எம்மனோரினும் முரணியன்- எம்மைப் போன்றவரினும் வலிமைமிக்கவன்; அவன் தனை முருக்கி - அத்தகைய அவனைக் கொன்று; முற்றினான் அரணியன் என்று- தீர்த்தவன் நமக்கு பாதுகாப்பானவன் என்று; அவற்கு அன்பு பூண்டனை- அந்தத்திருமாலுக்கு அன்பு கொண்டு வாழ்வாயாயினை. |
இலங்கைப் போரில் பங்கு பெறாமல் உயிர் பிழைக்க வீடணன் நினைப்பதாக எண்ணுவதை 'மரணம்...மாற்றும் வன்மையோய்' என்ற தொடர் குறிக்கிறது. அரணியன் - பாதுகாப்பவன். முருக்கி முற்றுதல் - கொன்று தீர்த்தல். எம்மனோர் - எ(ந)ம்மைப் போன்றவர். |
(2) |
6367. | 'ஆயவன் வளர்த்த தன் தாதை யாக்கையை |
| மாயவன் பிளந்திட மகிழ்ந்த மைந்தனும், |
| ஏயும் நம் பகைஞனுக்கு இனிய நண்பு செய் |
| நீயுமே நிகர்; பிறர் நிகர்க்க நேர்வரோ ? |
|
ஆயவன்- நீ கூறிய அத்தகையவனான பிரகலாதன்; வளர்த்த தன் தாதை யாக்கையை - தன்னைப் பெற்று வளர்த்த தந்தையான இரணியனது உடலை; மாயவன் பிளந்திட- மாயச் செயல்களை உடைய திருமால் பிளந்து வதைக்க; மகிழ்ந்த மைந்தனும்- அதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த மகனான அப்பிரகலாதனும்; ஏயும் நம் பகைஞனுக்கு- பொருந்திய நமது |