பக்கம் எண் :

 வீடணன் அடைக்கலப் படலம் 195

பகைவனான இராமனுக்கு; இனிய நண்பு செய் நீயுமே நிகர்-
இனிய  நட்புள்ளவனாகிய   நீயுமே   சமமானவர்கள்;   பிறர்
நிகர்க்க நேர்வரோ
- மற்றவர் எவரும் சமமாவார்களோ?
 

(3)
 

6368.

'பாழி சால் இரணியன் புதல்வன் பண்பு என,

சூழ்வினை முற்றி, யான் அவர்க்குத் தோற்றபின்,

ஏழை நீ என் பெருஞ் செல்வம் எய்தி, பின்

வாழவோ கருத்து ? அது வர வற்று ஆகுமோ ?

 

பாழிசால்  இரணியன் -  வலிமைமிக்க  இரணியனுடைய;
புதல்வன் பண்பு  என -  புதல்வனான   பிரகலாதனுக்குரிய
குணத்தைப்  போல;   சூழ்வினை   முற்றி   -   சூழ்ச்சியை
நிறைவேற்றி   முடித்து;    (அதனால்)    யான்   அவர்க்குத்
தோற்றபின்
- நான் அந்த மனிதனுக்குத் தோல்வியடைந்தபின்பு;
ஏழை   நீ   என்   பெருஞ்செல்வம்  எய்தி-  இப்போது
அறிவிலியாகிய  நீ   எனது   பெரிய  இலங்கையின்  ஆட்சிச்
செல்வத்தை அடைந்து;  பின்  வாழவோ  கருத்து-  பின்னர்
அரசனாக வாழலாம் என்பதோ  உனது  கருத்து?; அது  வர
வற்று ஆகுமோ
- அது நடக்கக் கூடிய காரியம் ஆகுமோ?;
 

பாழி - வலிமை. வரவற்று - நிகழக் கூடியது.
  

(4)
 

6369.

'முன்புற அனையர்பால் அன்பு முற்றினை;

வன் பகை மனிதரின், வைத்த அன்பினை;

என்பு உற உருகுதி; அழுதி; ஏத்துதி;

உன் புகல் அவர்; பிறிது உரைக்க வேண்டுமோ ?
 

முன்புற அனையர் பால்- இதற்கு முன்னேயே நீ  அந்த
மனிதர்களிடம்; அன்பு  பூண்டனை-  அன்பு  பூண்டவனாய்
இருந்தாய்; வன் பகை மனிதரின்- நமது வலிய பகைவர்களான
அந்த மானிடர்களிடத்தில்; வைத்த அன்பினை- வைக்கப்பட்ட
அன்புடையவனாக  இருக்கிறாய்;  என்புற   உருகுதி  அழுதி
ஏத்துதி
- எலும்பும் உருகும்படி அவர்களை நினைந்து உள்ளம்
உருகுகிறாய்  அழுகிறாய்,  துதிக்கிறாய்;   உன்புகல்   அவர்-
உனக்குப்  புகலிடம்  அவர்களே  என்றால்;  பிறிது  உரைக்க
வேண்டுமோ
- வேறு சொல்ல வேண்டுமோ?
 

முன்புற - முன்னதாக
 

(5)