பக்கம் எண் :

 முதற் போர் புரி படலம் 769

ஓச்சாக்  கழிதறுகண்மை  காதலித்து  உரைத்தன்று" (புறப், வெண்.72)
என  இதனை  ஐயன்  ஆரிதனார்  போற்றுவார். பேராண்மை என்ப
தறுகண்;  ஒன்று   உற்றக்கால்   ஊராண்மை  மற்று  அதன்  எஃகு"
(குறள் 773)  என வள்ளுவரும் போற்றுவார். இதற்கு,  உரை வரைந்த
பரிமேலழகர்,  "ஊராண்மை  -  உபகாரியாம்   தன்மை.  அஃதாவது
இலங்கையர்  வேந்தன்,  போரிடைத்  தன்  தானை  முழுதும்  படத்
தமியனாய்  அகப்பட்டானது நிலைமை நோக்கி,  அயோத்தியர் இறை,
மேற்செல்லாது,  "இன்று  போய் நாளை நின் தானையொடு  வா" என
விட்டாற்போல்வது"      என்று,    இந்த    நிகழ்ச்சியைச்    சுட்டி
விளக்கந்தருவார். திருவாய் மொழிஈட்டில் இந்நிகழ்ச்சி நம்பிள்ளையின்
உள்ளங்கவர்ந்துள்ளமையை கீழ்வரும்  பகுதி காட்டுகிறது.  இறைவன்
உயிர்களை அழிக்க நினைப்பதில்லை; வாழ்விக்கவே விரும்புகின்றான்;
அழித்தே  தீருவேன்  என்று  பிடிவாதம்  பிடிக்கும்  உயிரை,  வேறு
வழியின்றிக் கண்ணும் கண்ணநீருமாய் அழிக்கின்றான் என நம்பிள்ளை
கூறும்   பகுதி   இது.  "சிலரை  அழியச்  செய்ய" என்றால் ஆற்றல்
இல்லாதவனாக   இருக்கையைத்  தெரிவித்தபடி,  "இராவணன் தானே
ஆகிலும் இவனை அழைத்து கொண்டுவாரும்" என்னுமவன் அன்றோ,
கடலை  அணை  செய்து, ஊரை முற்றுகை இட்டு, பின்னை அங்கதப்
பெருமாளையும்  புகவிட்டு,   கையிலே    வந்து   அகப்பட்டவனை,
"இராட்சசேஸ்வரனான இராவணனே! போரில் அடிபட்ட நீ போ என்று
அனுமதி    தருகிறேன்.    இலங்கைக்குள்    சென்று   சிரமத்தைப்
போக்கிக்கொண்டு,  வில்லோடும்  தேரோடும்  கூடினவனாய் மீண்டும்
வா;  அப்போது  தேரில்  இருக்கிற நீ என் வலிமையைப் பார்ப்பாய்"
என்று  தப்பவிட்டது, இன்னம் ஒருகால் அவன் மனம் திருந்தி, தவறு
உணர்வானோ என்ற ஆசையால், அவன் அதர்மத்தில்  முற்றி நின்று
அழிந்தே   தீருவேன்   என்று   மறுநாளும்  வந்தபோது கண்ணும்
கண்ணநீருமாய்   அன்றோ   கொன்றது"   (திருவாய்:   (ஈடு. 9:2:10)
வீடணனேயாயினும் இராவணனே ஆயினும் அழைத்துக் கொண்டு வா
என்று   கருணை   அலையெறியக்  காத்திருக்கிறான்  அவன். "நான்
இரண்டு   துண்டாக   வெட்டுப்  படக்  கடவேன்;   அப்பொழுதும்
வணங்கமாட்டேன்" என்னும் உறுதியோடு நிற்கில், முடித்து விடுவான்"
(திருவாய்.  ஈடு  1:7:10)    என்பது    நம்பிள்ளையின்   திருவாக்கு.
எல்லாத்தானத்திலும் சிறந்தது உயிரைக் கொடுத்தலாம். அப்பெறற்கரும்
உயிரைக்  கொல்லக் காரணம் பல இருந்தும் அவனுக்குத் தானமாகத்
தந்தான்   ஆதலின்,  "வள்ளல்"  என்றார்.  எளிய  வாளை, உயர்ந்த
கமுகின் மேல் அஞ்சாது தாவி மோதும் எனக்  கோசல நாட்டில் நில
நீர்வளம்   குறிப்பினும்,   அந்நாட்டு   அஃறிணைப்   பொருள்களே
அத்தன்மையினை    யுடையவையாயின்,   அந்நாட்டுத்   தலைவன்
அஞ்சுவனோ!  என்னும்  குறிப்புப்  பொருளையும்  கொண்டு நின்றது
"நாகிளங்கமுகின் வாளை தாவுறும் கோசல நாடுடை வள்ளல்" என்னும்
தொடர்.   இராவணன்   ஒருகால்   நல்லுணர்வுற்று சீதையைத் தந்து
சரண்புகுவான் எனில்,