கரையை உடைய இரத்த அலைகளைக் கடந்து,; பூதர உதரம் புக்கென ஓடினர் - மலை வயிற்றுள் புகுந்தாற்போல் (கோபுர வாயிலில் புகுந்து) (இலங்கையினுள்) ஓடினர். |
தூதர், ரோதனம், பூதரம், உதரம், ரோதம் என்பன வடசொற்கள். ரோதனம் - அழுகை; பூதரம் - மலை; உதரம் - வயிறு, நடுவிடம்; ரோதம் கரை; ஓதம் - அலை; வேலை - கடல்; சீதம் - குளிர்ச்சி, ரோதம் என்பதற்குத் துன்பம் என்று பொருள் கொள்ளினுமாம். |
(1) |
9187. | அன்றில் அம் கரும் பேடைகள் ஆம் என, |
| முன்றில் எங்கும் அரக்கியர் மொய்த்து அழ, |
| 'இன்று இலங்கை அழிந்தது' என்று ஏங்குவார், |
| சென்று, இலங்கு அயில் தாதையைச் சேர்ந்துளார். |
|
அன்றில் அம் கரும் பேடைகள் ஆம் என- (தூதர்கள்) அன்றிற் பறவைகளின் அழகிய கரிய பேடைகளைப் போல; அரக்கியர் முன்றில் எங்கும் மொய்த்து அழ- அரக்கியர் தம் முன்றில் எங்கும் மொய்த்துக் கொண்டு அழ; 'இன்று இலங்கை அழிந்தது' என்று ஏங்குவார்- 'இன்று இலங்கை நகரம் அழிந்தது' என்று கூறிக் கொண்டு ஏங்குபவராய்; இலங்கு அயில் தாதையைச் சென்று சேர்ந்துளார்- விளங்குகின்ற வேற்படையையுடைய இந்திரசித்தின் தந்தையைச் சேர்ந்தார்கள். |
இலங்கை மாநகரின் செல்வத் திருமகனும் இளவரசனும் ஆகையினால் இந்திரசித்தின் இறப்பு இலங்கை அழிவதற்கு ஒப்பாகும் எனவே 'இன்று இலங்கை அழிந்தது' என்று தூதர் ஏங்கினர் என்பதாகும். |
(2) |
9188. | பல்லும் வாயும் மனமும் தம் பாதமும் |
| நல் உயிர்ப் பொறையோடு நடுங்குவார், - |
| 'இல்லை ஆயினன், உன் மகன் இன்று' எனச் |
| சொல்லினார் - பயம் சுற்றத் துளங்குவார். |
|
தம் பல்லும் வாயும் மனமும் பாதமும்- (சேர்ந்த தூதுவர்) தமது பற்களும், வாயும், மனமும், பாதமும்; நல்உயிர்ப் பொறையோடு நடுங்குவார் - சிறந்த உயிர்ப் பாரத்தோடு நடுங்கப் பெற்றவரும்; பயம் சுற்றத் துளங்குவார்- அச்சம் சூழ்ந்து கொள்ள நிலை கலங்கினவரும் ஆகி,; 'உன்மகன் இன்று இல்லை ஆயினன்' எனச் |