பக்கம் எண் :

224யுத்த காண்டம் 

பிற வினை உரைப்பது என்னே? பேர் அருளாளர்

என்பார்

கறவையும் கன்றும் ஒப்பார், தமர்க்கு இடர்

காண்கில்' என்றான்.

 

ஐய!  புறவு  ஒன்றின்  பொருட்டு - ஐயனே! தன்னிடம்
அடைக்கலம்  புகுந்த  புறாவிற்காக;  இன்யாக்கை  புண் உற
அரிந்த  புத்தேள் அறவனும்
  - தன்  இனிய உடம்பை புண்
உண்டாகத் தசை அரிந்தளித்த தெய்வத்தன்மையுள்ள அறவானாம்
சிபியும்;    நின்னை   நிகர்க்கிலன்  -  உனக்கு   ஒப்பாக
மாட்டான்; அப்பால் நின்ற பிறவினை உரைப்பது என்னே -
அதற்குப் பிறகு ஒழிந்த பிற செயல்களைக் கூறுவது என்ன பயன்?
பேர் அருளாளர் என்பார்- பெரிய அருளாளர் எனப்படுவோர்;
தமர்க்கு   இடர்   காணில்  - தம்மைச்    சார்ந்தவர்க்குத்
துன்பம்   வரக்  கண்டால்;  கறவையும்  கன்றும்   ஒப்பார்
என்றான்
- பசுவையும் கன்றையும்   போல்  விரைந்து சென்று
காப்பர் என்று கூறினான். 
 

(49)
 

9580.

சாலிகை முதல ஆன போர்ப் பரம் தாங்கிற்று

எல்லாம்

நீல் நிற ஞாயிறு அன்ன நெடியவன் முறையின் 

நீக்கி,

கோல் சொரி தனுவும் கொற்ற அனுமன் கைக்

கொடுத்து, கொண்டல்

மேல் நிறை குன்றம் ஒன்றில் மெய்ம் மெலிவு

ஆற்றலுற்றான்.

 

சாலிகை முதல ஆன போர்ப்பரம் தாங்கிற்று எல்லாம்-
கவசம்  முதலிய  போர்க்கெனத்  தாங்கிய  பாரத்தை  எல்லாம்;
நீல் நிற ஞாயிறு அன்ன நெடியவன் முறையின் நீக்கி - நீல
நிறமுள்ள    சூரியனைப்    போல     இராமன்,   இலக்குவன்
உடம்பிலிருந்து   முறையாக  நீக்கி;  கோல் சொரி தனுவும்  -
அம்புகளை   எய்யும்   வில்லையும்;  கொற்ற  அனுமன்  கை
கொடுத்து
- வெற்றிக்குரிய அனுமனின் கையில் கொடுத்துவிட்டு;
கொண்டல்  மேல்  நிறை   குன்றம் ஒன்றில்  - மேகங்கள்
நிறைந்த குன்றம் ஒன்றின்மேல்; மெய்ம்மெலிவு ஆற்றலுற்றான் 
- இலக்குவன் உடல் மெலிவை ஆற்றச் செய்தான்.  
 

(50)