பக்கம் எண் :

226யுத்த காண்டம் 

விதிமுறை வணங்கி- இராமனின் திருவடியைத் துதித்து;
வீந்த தீயவர் பெருமை நோக்கி- இறந்துபட்ட அரக்கரின்
பெருக்கைக்  கண்டு;  நடுக்கமும்  திகைப்பும் உற்றார்-
நடுக்கமும் திகைப்பும்   கொண்டார்; ஓய்வுறு   மனத்தார்
ஒன்றும்  உணர்ந்திலர்
- ஓய்ந்த உள்ளத்தினராய் எதுவும்
உணரவில்லை; நாணம் உற்றார் - வெட்கப்பட்டார்.
 

இளைப்பாறிய செய்தி முன் படலத்திலுளது. அரக்கர்
பெருக்கைக் கண்டதும் நடுக்கமும் அவர்கள் அனைவரையும்
இராமன் ஒருவனே   கொன்றான் என   எண்ணி வியப்பும்
கொண்டார், 'இத்தகைய வலிமை படைத்த இராமனுக்கு நாம்
உதவுகின்றோம்' என எண்ணிய சுக்கிரீவன் முதலானார்க்கு
நாணம் உண்டாயிற்று. எனவே பேச்சடங்கி நின்றனர். 
 

(1)
 

9582.

'மூண்டு எழு சேனை வெள்ளம் உலகு ஒரு மூன்றின்

மேலும்

நீண்டு உள அதனை, ஐய! எங்ஙனம் நிமிர்ந்தது?'

என்னத்

தூண் திரண்டனைய திண் தோள் சூரியன் சிறுவன்

சொல்ல,

'காண்டி நீ, அரக்கர் வேந்தன்தன்னொடும் களத்தை'

என்றான்.

 

ஐய !- இராமனே; மூண்டு எழு சேனை வெள்ளம் - போரில்
பகைமிகுந்து   எழும்  சேனைப்   பெருக்கம்; உலகு ஒரு மூன்றின்
மேலும் நீண்டுஉள
- மூன்றுலகங்களை விட நீண்டுள்ளன; அதனை
எங்ஙனம்  நிமிர்ந்தது?  என்ன 
 -  அப்படிப்பட்டதை  எவ்வாறு
வென்றது  என்று;  தூண்திரண்டனைய  திரள்  தோள்  சூரியன்
சிறுவன்   சொல்ல
- தூண்   பருத்துள்ளது   போல்   திண்ணிய
தோளையுடைய   சூரியன்மகனாம்   சுக்கிரீவன்   கேட்க;   'நீ
அரக்கர் வேந்தன் தன்னொடும் களத்தைக் காண்டி' என்றான்

- 'நீ வீடணனொடு சென்று போர்க்களத்தை நேரில் பார்' என்று
இராமன் சொன்னான்.
 

(2)
 

9583.

தொழுதனர் தலைவர் எல்லாம்; தோன்றிய காதல்

தூண்ட,

'எழுக' என விரைவின் சென்றார், இராவணற்கு

இளவலோடும்;