9598. | 'சகரம் முந்நீர்ச் செம்புனல் வெள்ளம் தடுமாறா, |
| மகரம் தம்மின் வந்தன காணா, மனம் உட்கி, |
| ''சிகரம் அன்ன! யானைகொல்?'' என்னச் சில |
| நாணி, |
| நகரம் நோக்கிச் செல்வன காண்மின் - நமரங்காள்! |
|
நமரங்காள் - நம்மவர்களே!; சகரம் முந்நீர்ச் செம்புனல் வெள்ளம் தடுமாறா - சகரரால் தோண்டப் பெற்ற கடல்நீர், போர்க்கள இரத்த வெள்ளம் தம்முன் கலந்து விட்டமையால்; மகரம் தம்மின் வந்தன காணா- மகரமீன்கள் தம்மோடு வந்து நிற்பவற்றைக் கண்டு யானைகள்; மனம் உட்கி - உள்ளம் அஞ்சி; சிகரம் அன்ன யானைகொல் என்ன - மலைபோன்ற யானைகள் என்றெண்ணி; சிலநாணி - சில மகரமீன்கள் நாணத்தோடு, நகரம் நோக்கிச் செல்வன காண்மீன்- தம் வாழுமிடமான கடலை நோக்கிப் போவனவற்றைப் பாருங்கள். |
(18) |
9599. | 'விண்ணில் பட்டார் வெற்பு உறழ் காயம் பல, மேன் |
| மேல், |
| மண்ணில் செல்வார் மேனியின் வீழ, மடிவுற்றார், |
| எண்ணின் தீரா அன்னவை தீரும் மிடல் இல்லாக் |
| கண்ணில் தோன்றார், விம்மி உளைக்கும் படி காணீர். |
|
விண்ணில் பட்டார்- வானத்தில் (செல்லும் போது இராமனின் அம்புபட்டு) இறந்தவர்களின்; வெற்புஉறழ் காயம் பல - மலைபோன்ற உடம்புகள் பல; மண்ணில் செல்வார் மேனியின் மேன்மேல் வீழ- மண்ணுலகில் நடப்போர் உடம்பின் மேல் மேலும் வீழ்தலால்; மடிவுற்றார் - மடியப்பட்டவர்கள்; எண்ணில் தீரா அன்னவை தீரும் - அளவிடமுடியாத அப்பிணங்களை நீக்கும்; மிடல் இல்லார் கண்ணில் தோன்றார்- வலிமை இல்லாராய் நம் கண்களுக்கு வெளிப்படாதவராய்; விம்மி உளைக்கும்படி காணீர்- தேம்பி வருந்தும் நிலையைப் பாருங்கள். |
(19) |
9600. | 'அச்சின் திண் தேர், ஆனையின், மாமேல், |
| காலாளின் |
| மொய்ச்சுச் சென்றார் மொய் குருதித் தாரைகள் |
| முட்ட, |