இடிகள் பல வலியற்று வீழவும்; உலகம் கீண்டு நளில் தீர்த்த நாகபுரம் புக்கு - உலகைக் கிழித்துச் செறிவில்லாத தூய நாகருலகில் புகுந்து; இழிந்த பகழிவழி நதியின் ஓடி- இறங்கிய அம்பு சென்ற வழியில் ஆறுபோல் ஓடி; களிறு ஈர்த்துப் புகமண்டும்- யானைகளை இழுத்துக் கொண்டு நாக உலகிற்கு புக நெருங்கும்; சுடுங் குருதித் தடஞ்சுழிகள்- வேகத்துடன் வரும் இரத்தத்தின் பெரிய சுழிகளை; காண்மின் காண்மின்- பாருங்கள் பாருங்கள். |
(26) |
9607. | 'கய்த்தலமும், காத்திரமும், கருங் கழுத்தும், |
| நெடும் புயமும், உரமும், கண்டித்து |
| எய்த்தில போய், திசைகள்தொறும் இரு நிலத்தைக் |
| கிழித்து இழிந்தது என்னின் அல்லால், |
| மத்த கரி வய மாவின், வாள் நிருதர் |
| பெருங் கடலின், மற்று இவ் வாளி |
| தய்த்து உளவாய் நின்றது என ஒன்றேயும் |
| காண்பு அரிய தகையும் காண்மின்! |
|
கய்த்தலமும் - யானையின் தும்பிக்கையும்; காத்திரமும்- முன்னங் கால்களையும்; கருங்கழுத்தும் - பெரிய வலிய கழுத்தும்; நெடும் புயமும்- நீண்ட தோள்களையும்; உரமும் கண்டித்து - மார்பையும் துண்டித்து; எய்த்தில போய்- சளைக்காமல் சென்று; திசைகள் தொறும் - திக்குகள் தோறும்; இருநிலத்தைக் கிழித்து - பெரிய நிலத்தைக் கிழித்துக் கொண்டு; இழிந்தது என்னின் அல்லால் - பாதலத்தில் இறங்கின என்று சொல்வது தவிர; மத்த கரிவய மாவின் வாள் நிருதர்- மதமிக்க யானை வெற்றி தரும் குதிரை, படைவீரர்கள் ஆகிய; பெருங்கடலின்- பெரிய கடலின் மீது; இவ்வாளி தய்த்து உளவாய் நின்றது என- இராமனின் இவ் அம்பு தைத்துக் கிடப்பதாயிற்று என்று; ஒன்றேயும் காண்பு அரிய தகையும்- சிறிதும் காணற்கரிய தன்மையும்; காண்மின்- பாருங்கள். |
(27) |
கலிவிருத்தம் |
9608. | குமுதம் நாறும் மதத்தன, கூற்றன, |
| சமுதரோடு மடிந்தன, சார்தரும் |
| திமிர மா அன்ன செய்கைய, இத் திறம் |
| அமிர்தின் வந்தன, ஐ-இரு கோடியால். |