பக்கம் எண் :

242யுத்த காண்டம் 

விரி சினத்து இகல் விஞ்சையர் வேந்தனைப்
பொருது பற்றிய, தாமரை போலுமால்.'
 

அரிய அப்பரி - எய்துதற்கு அரிய அந்தக் குதிரைகள்;
இருநிதிக் கிழவன் இழந்து ஏகின- குபேரன் (இராவணனுடன்
செய்த போரில்) தோற்று விட்டு ஓடினவாம்; ஆயிரம் ஆயிரம்
- ஆயிரம் ஆயிரம் என்னும் அளவின; விரிசினத்து இகல்-
விரிந்த கோபமுள்ள பகை பூண்ட; விஞ்சையர் வேந்தனை -
வித்தியாதரர் அரசனை; பொருது பற்றிய தாமரை போலும்-
போரில் வென்று கைப்பற்றிய எண்ணிக்கை தாமரை எனும்
பேரளவின ஆம். 
 

(34)
 

9615.

என்று, 'காணினும், காட்டினும், ஈது இறைக்
குன்று காணினும் கோள் இலது; ஆதலால்,
நின்று காணுதும்; நேமியினானுழைச்
சென்று காண்டும்' என்று ஏகினர், செவ்வியோர்.
 

என்று காணினும் காட்டினும்- இக்களக் காட்சியை என்றும்
நாங்கள் கண்டு கொண்டேயிருந்தாலும் நீ காட்டிக் கொண்டே
யிருந்தாலும்; ஈது இறைக்குன்று நாணினும் கோளிலது- இது
இமயமலை போன்ற பெருமலையைக் காணமுடியும் கொள்கை
யுடையதன்று; ஆதலால்- எனவே; நின்று காணுதும்- சிறிது
கழித்துக் காண்போம்; நேமியினான் உழைச்சென்று காண்டும்
- இராமனிடத்துச் சென்று பார்க்கலாம்; என்று செவ்வியோர்
ஏகினர்
- என்று கூறிச் சிறந்தவராம் வானரத் தலைவர்கள்
சென்றனர். 
 

(35)
 

9616.

ஆரியன் - தொழுது, ஆங்கு அவன் பாங்கரும்,
போர் இயற்கை நினைந்து எழு பொம்மலார்,
பேர் உயிர்ப்பொடு இருந்தனர்; பின்பு உறும்
காரியத்தின் நிலைமை கழறுவாம்.
 

ஆரியன் தொழுது- உயர்ந்தோனாம் இராமனை வணங்கி;
ஆங்கு அவன் பாங்கு- அங்கு அவன் பக்கத்தில்; அரும்போர்
இயற்கை நினைந்து
- அரிய போரின் இயல்பை எண்ணி; எழு
பொம்மலார்
- எழுகின்ற   பெருமகிழ்ச்சியுடையோராய்;   பேர்
உயிர்ப்பொடு இருந்தனர்
- பெருமூச்சு விட்டிருந்தனர்; பின்பு
உறும்
- இனிப் பின்பு நிகழும்; காரியத்தின் நிலைமை கழறுவாம்
- செயல்களின் நிலைமையைக் கூறுவோம்.
 

(36)