பொருட்டுப் போர் புரிந்து வருந்தியவர்க்கும்; தம் அன்பின் வந்தவர்க்கு - அவ்வீரர் தம் மேல் வைத்த அன்பினால் வந்தவர்க்கும்; அருந்துதற்கு அமைவு ஆயின- உண்பதற்குப் பொருந்தியவற்றை; ஆக்குவான் விருந்து அமைக்க - அமைத்திட்டு விருந்து செய்ய; மிகுகின்ற வேட்கையான - மிகுந்த விருப்பம் உடையவனாய். |
(1) |
9618. | வான நாட்டை 'வருக!' என, வல் விரைந்து, |
| ஏனை நாட்டவரோடும் வந்து எய்தினார்; |
| 'மான நாட்டு அந்த போகம் அமைத்திர்; மற்று |
| ஊனம் நாட்டின், இழத்திர் உயிர்' என்றான். |
|
வானநாட்டை- விண்ணவரை;வருக என- வாருங்கள் என்று ஆணையிட்டவுடன்; வல்விரைந்து ஏனை நாட்டவரோடும் - மிக விரைந்த மற்றையதானவர் நாட்டோடும்; வந்து எய்தினார்- வந்து சேர்ந்தனர்; 'மான நாட்டு அந்த போகம் அமைத்திர் - உயர்ந்த விண்ணவர் நாட்டு அரிய உணவைப் படைப்பீராக; மற்று ஊனம் நாட்டின் - மாறாகக் குறைகள் செய்தால்; உயிர் இழத்திர் என்றான் - உம் உயிரை இழப்பீர் என்றான். |
(2) |
9619. | நறவும் ஊனும், நவை அற நல்லன |
| பிறவும், ஆடையும், சாந்தமும், பெய்ம் மலர்த் |
| திறமும், நானப் புனலொடு சேக்கையும் |
| புறமும் உள்ளும் நிறையப் புகுந்தவால். |
|
நவை அற நல்லன நறவும் ஊனும் - குற்றமில்லாமல் நல்லனவாகிய கள்ளும் ஊனும்; பிறவும் ஆடையும் சாந்தமும்- பிற உணவுப் பொருள்களும் ஆடைகளும் பூசும் சந்தனமும்; பெய்ம்மலர்த் திறமும் - அணிதற்குரிய மலர்வகையும்; நானப் புனலொடு - கத்தூரி போன்ற மணப்பொருள் கலந்த குளித்தற்குரிய நறு மண நீரொடு; சேக்கையும் - படுத்தற்குரிய படுக்கைகளும் ஆகியவைகள்; புறமும் உள்ளும் - அரண்மனைக்கு உள்ளேயும் வெளியேயும்; நிறையப் புகுந்தன - நிறைய வந்து சேர்ந்தன. |
(3) |
9620. | நானம் நெய் நன்கு உரைத்து, நறும் புனல் |
| ஆன கோது அற ஆட்டி, அமுதொடும் |