நெஞ்சன் - உடலிலுள்ள புண் பிளந்தது போன்ற துன்பமிக்க உள்ளமுடைய இராவணன்; கோபுரத்து இழிந்து போனான்- கோபுரத்திலிருந்து இறங்கி வந்தான். | (24) | 9641. | நகை பிறக்கின்ற வாயன், நாக்கொடு கடை வாய் | | நக்கப் | | புகை பிறக்கின்ற மூக்கன், பொறி பிறக்கின்ற | | கண்ணன், | | மிகை பிறக்கின்ற நெஞ்சன், வெஞ் சினத் தீமேல் | | வீங்கி, | | சிகை பிறக்கின்ற சொல்லன், அரசியல் இருக்கை | | சேர்ந்தான். | | நகை பிறக்கின்ற வாயன் - கோபச் சிறப்புத் தோன்றும் வாயுடையவனாய்; நாக்கொடு கடைவாய் நக்க- நாக்குடன் கடைவாய் கோபச் சிரிப்பு கொள்ளுவதால்; புகை பிறக்கின்ற கண்ணன் - தீப்பொறி பறக்கின்ற கண்ணுடையவனாய்; மிகைபிறக்கின்ற நெஞ்சன்- செருக்குத் தோன்றும் நெஞ்சு உடையவனாய்; வெஞ்சினத்தீ மேல் வீங்கி- தீயானது கொடிய கோபத்தில் மிகுதியாக ஓங்கி; சிகைபிறக்கின்ற சொல்லன் - கோபத்தெழுந்து தோன்றுகின்ற சொற்களை உடையவனாய்; அரசியல் இருக்கை சேர்ந்தான்- ஆட்சி நடத்தும் அரண்மனையை அடைந்தான். | (25) |
|
|
|