சேனை எது உள்ளது?; இலங்கையுள் இருந்த சேனை - இலங்கைக்குள் இருந்த படை; யாதையும் எழுக என்று - எல்லாவற்றையும் எழுக என; ஆனை மணி முரசு எற்றுக என்றான்- அழகிய முரசத்தை யானைமீது ஏற்றி அடிப்பிடிக்க என்றான். |
(1) |
9643. | எற்றின முரசினோடும் ஏழ் - இரு நூறு கோடி |
| கொற்றவாள் நிருதர்சேனை குழீஇயது; கொடித் திண் |
| தேரும், |
| சுற்றுறு துளைக் கைம் மாவும், துரகமும், பிறவும் |
| தொக்க, |
| வற்றிய வேலை என்ன, இலங்கை ஊர் வறளிற்று |
| ஆக. |
|
ஏற்றின முரசினோடும் - முழக்கிய முரசத்துடன்; ஏழ்இரு நூறுகோடி - பதினான்கு நூறுகோடி;கொற்றவாள் நிருதர் சேனை- வெற்றி பொருந்திய அரக்கர் படை; குழீஇயது- திரண்டது; வற்றிய வேலை என்ன- நீர்வறண்டு போன கடல் போல; இலங்கையூர் வறளிற்றாக - இலங்கை நகர் வறுமையுடையதாக ஆயிற்று; கொடித்திண் தேரும் - கொடிகள் கட்டிய தேரும்; சுற்றுறு துளைக்கைம்மாவும் - சுற்றிச் சுழலும் துளைக் கையையுடைய யானையும்; துரகமும் பிறவும் தொக்க - குதிரையும் பிற படை யாவையும் சேர்ந்த; |
(2) |
9644. | ஈசனை, இமையா முக் கண் ஒருவனை, இருமைக்கு |
| ஏற்ற |
| பூசனை முறையின் செய்து, திரு மறை புகன்ற |
| தானம் |
| வீசினன் இயற்றி, மற்றும் வேட்டன வேட்டோர்க்கு |
| எல்லாம் |
| ஆசு அற நல்கி, ஒல்காப் போர்த் தொழிற்கு |
| அமைவது ஆனான். |
|
ஈசனை - எல்லாச் செல்வங்களும் உடையவனும்; இமையா முக்கண் ஒருவனை - இமைக்காத மூன்று கண்களை உடையவனும் ஆன சிவபெருமானை; இருமைக்கு ஏற்ற - இம்மை மறுமைக்குகந்த; பூசனை முறையின் செய்து - பூசைகளை |