பக்கம் எண் :

 இராமன் தேர் ஏறு படலம்287

'வல் இதனை ஊர்வது ஒரு மாதலி எனப் பேர்
சொல்லுவர்' எனத் தொழுது, நெஞ்சினொடு 

சொன்னான்.

 

'இனி ஐயம் இல்லை- இனிமேல் ஐயம் ஏதும் இல்லை; என
எண்ணிய இராமன்
  -  என்று   தெளிவுற்று எண்ணிய இராமன்;
நல்லவனை  -  நற்பண்புடைய  மாதலியை  நோக்கி; 'நீ உனது
நாமம் நவில்க' என்ன
- நீ உனது பெயரைச்  சொல்லுக என்று
கூற;   வல் இதனை   ஊர்வது   ஒரு   மாதலி எனப் பேர்
சொல்லுவர் என
- வலிய இத் தேரினை ஏறிச் செலுத்துவதற்குரிய
மாதலி என்று என்   பெயரைச் சொல்லுவார்கள் என்று; தொழுது
-  வணங்கி; நெஞ்சினொடு சொன்னான்- மனமாரக் கூறினான்.
  

(25)
 

9702.

மாருதியை நோக்கி, இள வாள் அரியை நோக்கி,
'நீர் கருதுகின்றதை நிகழ்த்தும்' என, நின்றான்
ஆரியன்; வணங்கி, அவர், 'ஐயம் இலை, ஐயா!
தேர் இது புரந்தரனது' என்றனர், தெளிந்தார்.
 

மாருதியை நோக்கி  - அனுமனைப்   பார்த்து; இள வாள்
அரியை நோக்கி
- பின்னர் இளைய ஒளி வீசும் சிங்கம் போன்ற
இலக்குவனைப் பார்த்து; 'நீர் கருதுகின்றதை  நிகழ்த்தும் என
-  'நீங்கள்   உங்கள்  கருத்தைச் சொல்லுங்கள் என்று   கேட்டு;
நின்றான்   ஆரியன்  -  தலைவனாகிய    இராமன்   (தேரில்
ஏறிவிடாமல்);  தாமதித்து   நின்றான்;    தெளிந்தார்  -  ஐயம்
தெளிந்தவராகிய அவர்கள்; 'ஐயா,  ஐயம் இலை - தலைவனே!;
ஐயமே இல்லை;இது புரந்தரனது தேர்- இது தேவேந்திரனுடைய
தேர்தான்; என்றனர்...
 

ஆரியன் என்ற சொல் பண்பின் நாயகன் என்ற கருத்துடையது
என்பதையும் கருதுக. 
 

(26)
 

9703.

விழுந்து புரள் தீவினை நிலத்தொடு வெதும்ப,
தொழும் தகைய நல்வினை களிப்பினொடு துள்ள,
அழுந்து துயரத்து அமரர் அந்தணர் கை முந்துற்று
எழுந்து தலை ஏற, இனிது ஏறினன் - இராமன்.
 

நிலத்து விழுந்து புரள் தீவினை- தரையிலே விழுந்து புரளத்
தொடங்கிவிட்ட தீவினை; வெதும்ப- வாடவும்; தொழுந்தகைய