அலங்கல் சில்லி- ஒளி வீசும் தேருருளை; பூமியில் சுரித்த தன்மை - புழுதியில் புதைந்த தன்மையை; நோக்கிய புலவர்போத - பார்த்துக் கொண்டிருந்த தேவர்கள் வந்து; (இராமபிரான் உடற்பாரத்தை வியந்தவர்களாய்); ஊழி வெங் காற்றின் - யுக முடிவுக் காலத்தில் பொங்கும் வெப்பம் நிறைந்த சூறாவளியைக் காட்டிலும்; வெய்ய கலுழனை - கொடிய கருடாழ்வானை,; ஒன்றும் சொல்லார்- (நினைந்து) புகழ்ச்சியாக யாதும் கூறாமல்; அநுமன் தோளை- (ஆற்றல் மிக்க) அநுமனின் தோள்களை; மலர்கள் தூவி - பூக்கள் சொரிந்து; வாழிய - வாழ்க வாழ்க என்று; ஏத்தினார்- போற்றி செய்தார்கள். |
(1) |
9705. | 'எழுக, தேர்; சுமக்க, எல்லோம் வலியும்; புக்கு |
| இன்றே பொன்றி |
| விழுக, போர் அரக்கன்; வெல்க, வேந்தர்க்கு |
| வேந்தன்; விம்மி |
| அழுக, பேர் அரக்கிமார்' என்று ஆர்த்தனர், அமரர்; |
| ஆழி |
| முழுகி மீது எழுந்தது என்னச் சென்றது, மூரித் |
| திண் தேர். |
|
(தேவர்கள் மேலும்), அமரர் - தேவர்; தேர் எழுக- இத்தேர் மேலெழுக; எல்லோம் வலியும் சுமக்க - நம் யாவருடைய வலிமையையும் இத்தேர் ஏந்துவதாக; புக்கு இன்றே போர் அரக்கன் பொன்றி விழுக - (இத்தேர்) புகுவதால் இன்றைய தினமே போர் வெறி கொண்ட அரக்கனாகிய இராவணன் அழிந்து வீழ்வானாக; வேந்தர்க்கு வேந்தன் வெல்க- வேந்தருக்கெல்லாம் சக்கரவர்த்தியான இராமன் வாகை சூடுவானாக; பேர் அரக்கிமார் விம்மி அழுக- அரக்கர்களின் மனைவிமார்களான எண்ணற்ற அரக்கியர் (தம் கணவர் மாய) விம்மி அழுவார்களாக'; என்று அமரர் ஆர்த்தனர் - என்று கூறி தேவர்கள் ஆரவாரம் புரிந்தனர்; மூரித்திண்தேர்- வலிமையும் திண்மையும் மிக்க இராமனின் தேர்; ஆழி முழுகி மீதெழுந்தது என்ன- கடலில் முழுகி மேலெழுந்தாற் போன்று (புழுதியினின்றும் பொங்கியெழுந்து); சென்றது - (போர்க்களம் நோக்கிச்) சென்றது. |
(2) |