இராமன் எதிரே தேரைவிடுமாறு இராவணன் சாரதிக்குக் கூறுதல் |
9706. | அன்னது கண்ணின் கண்ட அரக்கனும், 'அமரர் |
| ஈந்தார் |
| மன் நெடுந் தேர்' என்று உன்னி, வாய் மடித்து |
| எயிறு தின்றான்; |
| பின், 'அது கிடக்க' என்னா, தன்னுடைப் பெருந் |
| திண் தேரை, |
| மின் நகு வரி வில் செங் கை இராமன்மேல் விடுதி' |
| என்றான். |
|
அன்னது- அந்தத் தேரை; கண்ணின் கண்ட அரக்கனும் - தன் கண்களால் பார்த்த இராவணனும்; 'மன் நெடுந் தேர் அமரர் ஈந்தார்' - 'நிலை பெற்ற பெரிய தேரைத் தேவர் கொடுத்தார்'; என்று உன்னி - எனக் கருதி; வாய் மடித்து எயிறு தின்றான் - உதடுகளைக் கடித்துப் பற்களை மென்றான்; பின் - அதன்பிறகு; 'அது கிடக்க' - 'அது கிடக்கட்டும்'; என்னா- என்று (அலட்சியமாய்க்) கருதியவனாய்; தன்னுடைப் பெருந்திண் தேரை- தன்னுடைய பெரிய வலிமையான தேரினை; மின் நகு வரிவில் செங்கை இராமன் மேல் - ஒளியைச் சிந்தும் கட்டமைந்த வில்லைச் செவ்விய கைகளில் ஏந்திய இராமபிரான் மீது; விடுதி' - விடுவாயாக'; என்றான் - என்று (தன் பாகனுக்குக்) கட்டளையிட்டான். |
(3) |
வானவர் போருக்கு ஆயத்தமாதல் |
9707. | இரிந்த வான் கவிகள் எல்லாம், 'இமையவர் இரதம் |
| ஈந்தார்; |
| அரிந்தமன் வெல்லும் என்றற்கு ஐயுறவுஇல்' என்று, |
| அஞ்சார், |
| திரிந்தனர்; மரமும் கல்லும் சிந்தினர்; 'திசையோ |
| அண்டம் |
| பிரிந்தனகொல்!' என்று எண்ணப் பிறந்தது, |
| முழக்கின் பெற்றி. |
|
இரிந்த - முன்பு சிதறியோடின; வான்கவிகள் எல்லாம் - வானரர்கள் எல்லோரும்; 'இமையவர் இரதம் ஈந்தார்- தேவர்கள் |