கொல்வதற்கு இவ்வளவு ஆவேசப்படுகின்ற நீ உன் புதல்வனைக் கொன்றவனைக் கொல்ல ஏன் பின்தங்குகின்றாய்; உன் வீரத்தையும் ஆவேசத்தையும் அவரிடமன்றோ காட்டவேண்டுமென்பதனையும் குறிப்பால் உணர்த்துகின்றான். கூசுதல் - மனம் பின்வாங்குதல். |
(60) |
இந்திரசித்தின் உடலைத் தைலத்தோணியில் இடப் பணித்தல் |
9246. | என்னலும், எடுத்த கூர் வாள் இரு நிலத்து இட்டு, |
| மீண்டு, |
| மன்னவன், 'மைந்தன்தன்னை மாற்றலார் வலியால் |
| கொண்ட |
| சின்னமும், அவர்கள் தங்கள் சிரமும் கொண்டு |
| அன்றிச் சேர்கேன்; |
| துன்னரும் தயிலத்தோணி வளர்த்துமின்' என்னச் |
| சொன்னான். |
|
என்னலும், எடுத்த கூர்வாள் இருநிலத்து இட்டு- என்று மகோதரன் கூறிய அளவில் தான் சீதையை வெட்ட எடுத்த கூரிய வாளைப் பெரிய நிலத்தின் மேல் போட்டுவிட்டு; மன்னவன் மீண்டு- மன்னவனாகிய இராவணன் தான் செய்யக்கருதியதினின்றும் மீண்டு; 'மைந்தன் தன்னை மாற்றலார் வலியால் கொண்ட சின்னமும் - 'மைந்தன் இந்திரசித்தினை பகைவர்கள் வலிமையால் கொன்று கொய்து (தம்) வெற்றிக்குச் சின்னமாகக் கொண்டு சென்ற தலையினையும்; அவர்கள் தங்கள் சிரமும் கொண்டு அன்றிச் சேர்கேன் - (பழிக்குப் பழியாக) அப்பகைவர் தங்கள் தலையையும் கொண்டல்லது இங்கு வாரேன்; துன்னரும் தயிலத்தோணி வளர்த்துமின்' என்னச் சொன்னான் - நெருங்குதற்கரிய எண்ணைத் தாழியில் இந்திரசித்தின் உடம்பை இட்டு வையுங்கள் என்று கூறினான். |
(61) |