தூதர்கள்; ஒத்தனர் அணுகி வந்து வணங்கினர்- ஒரு சேர நெருங்கி வந்து வணங்கினராய்; இலங்கை உன் ஊர்ப் பத்தியின் அடைந்த - (அரசே!) இலங்கையாகிய உனது ஊரில் வரிசையாக வந்து அமைந்த; தானைக்கு இடம் இலை; பணி என்?' என்றார்- சேனைக்கு இடம் இல்லை; இனி, யாம் செய்யத்தக்க பணி என்ன?' என்று வினவினார்கள். |
அத்தொழில் - இந்திரசித்துவின் உடலைத் தயிலத் தோணியில் இடும் தொழில். ஆயிடை - அவ் + இடை. அனைத்துத் திக்கும் - திக்கு அனைத்தும். பொத்திய - நிரம்பிய. |
(1) |
9248. | ஏம்பலுற்று எழுந்த மன்னன், 'எவ் வழி எய்திற்று?' |
| என்றான்; |
| கூம்பலுற்று உயர்ந்த கையர், 'ஒரு வழி கூறலாமோ? |
| வாம் புனல் பரவை ஏழும் இறுதியின் வளர்ந்தது |
| என்னாத் |
| தாம் பொடித்து எழுந்த தானைக்கு உலகு இடம் |
| இல்லை' என்றார். |
|
ஏம்பலுற்று எழுந்த மன்னன் 'எவ்வழி எய்திற்று?' என்றான் - மகிழ்ச்சியுற்று எழுந்த இராவணன் (அப்படை) எவ்விடத்து வந்துளது? என வினவினான்; கூம்பலுற்று உயர்ந்த கையர் - குவிந்து உயர்ந்த கையை உடையவர்களாகிய தூதுவர்கள்; 'ஒருவழி கூறலாமோ? வாம்புனல் பரவை எழும்- (அச்சேனை இன்ன இடத்தில் இருந்தது என்று சுட்டி) ஓரிடத்தைச் சொல்லுதல் கூடுமோ? அலைகள் தாவிச் செல்லுகின்ற கடல்கள் ஏழும்; இறுதியின் வளர்ந்தது என்னா - ஊழி இறுதியில் பொங்கிப் பரந்தது என்னுமாறு; தாம் பொடித்து எழுந்த தானைக்கு உலகு இடம் இல்லை' என்றார் - தாமே கிளர்ந்து எழுந்த சேனை தங்குவதற்கு உலகம் இடமுடையதாக இல்லை என்று கூறினார்கள். |
ஏம்பல் - மகிழ்ச்சி. கூம்பல் உற்று உயர்ந்த கையர் என்றது சிரமேற் குவிந்த கரத்தவர் என்றவாறு. ''கூம்பலங்கைத்தலத் தன்பரென் பூடுருகக்குனிக்கும்'' (திருக்கோவை - 11) ''குவிகையேவலர்'' (குசேலர் - 2:78) எவ்வழி எய்திற்று? என்ற வினாவிற்கு ''ஒரு வழி கூறலாமோ?'' என்ற வினவிப் பதிலிறுத்தனர் தூதர். 'அரக்கர் தானைக்கு உலகில் இடமில்லை' என்றதனால் அது இறந்துபடும் என்ற குறிப்புப் பொருளும் தொக்கது. |
(2) |