பக்கம் எண் :

418யுத்த காண்டம் 

உண்ணும் நீர் உகுத்தல் - வாசோதகம் திலோதகம் கொடுத்தல்
என்பர். 
 

(247)
 

9951.

வந்து தாழ்ந்த துணைவனை, வள்ளலும் 

'சிந்தை வெந் துயர் தீருதி, தெள்ளியோய்! 

முந்தை எய்தும் முறைமை இது ஆம்' எனா, 

அந்தம் இல் இடர்ப் பாரம் அகற்றினான். 

 

வந்து தாழ்ந்த துணைவனை - (தன்முன்) வந்து அடியிற்
பணிந்த தம்பியாகிய வீடணனை;   வள்ளலும்-   வள்ளலாகிய
இராமபிரானும்; தெள்ளியோய்- உலகந் தெளிவுற்ற மேலோனே!;
சிந்தை   வெம்  துயர்  தீருதி- (உன்) மனத்தே  நிறையும்
கொடுந்துயரை நீக்குவாயாக; அது முந்தை எய்தும் முறைமை
ஆம்
-  (இறந்தோரால்  எய்தும்  துயர்  துடைத்து   ஆறுதல் 
கொள்வதே) முந்தையோர் கொண்ட  முறைமையாகும்; எனா -
என்று; அந்தம் இல் இடர்ப் பாரம் அகற்றினான் - (வீடணன்
கொண்ட) முடிவற்ற   துன்பச்சுமையை   (இராமபிரான்   தன்
இன்னுரைகளால்) நீக்கியருளினான்.
 

வீடணன் தெளிந்த உள்ளங் கொண்டோனாதலின் உணர்வான்
என்று கருதி, பெருமான் ''தெள்ளியோய்!'' என்று அழைத்தான். 
 

(248)