பக்கம் எண் :

 திருமுடி சூட்டு படலம்601

- தென் மேற்கு  திசையில் தோன்றுகின்ற; நந்தியம்பதியை
நீங்கி
- நந்திக் கிராமத்தினின்றும் புறப்பட்டு; கொடி மதில்
அயோத்தி   மேவ
  -  கொடிகளால் அழகு பெற்றிருக்கும்
மதில் சூழ்ந்த அயோத்தி நகரை அடையும் பொருட்டு; சுருதி
ஒத்தனைய
-  வேதங்களுக்கு நிகரான;வெள்ளை துரகதக்
குலங்கள் பூண்டு 
- வெண்ணிறப் புரவிகள் பூட்டப் பெற்ற;
பருதி ஒத்து இலங்கும்  - கதிரவனைப் போல் ஒளி வீசும்;
பைம்பூண் பருமணித் தேரின் ஆனான்
- பசும்பொன்னால்
புனையப் பெற்ற பெருமணிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரின்
மீது ஏறினான்.
 

நிருதி - தென்மேற்குத் திசைக் காவலன்.
 

சத்துவம் நிறைந்தவை வேதங்கள். சத்துவம் வெண்ணிறம்
என்பர். வெள்ளைப் புரவிகட்கு அதனால் வேதங்களை
ஒப்பிட்டார்.
 

(2)
 

தம்பிமாருடன் இராமன் அயோத்தி புகுதல்
 

10292.

ஊழியின் இறுதி காணும் வலியினது உயர் பொன் 

தேரின்,

ஏழ் உயர் மதமா அன்ன இலக்குவன் கவிகை ஏந்த,

பாழிய மற்றைத் தம்பி பால்நிறக் கவரி பற்ற, 

பூழியை அடக்கும் கண்ணீர்ப் பரதன் கோல் 

கொள்ளப் போனான்.

 

ஊழியின் இறுதி காணும் - யுக  முடிவின் எல்லை காணவல்ல;
வலியினது - உறுதி மிக்கதான; உயர்பொன்   தேரின்  -  உயர்ந்த
பொன்னாலாகிய தேரில்; ஏழ் உயர் மதமா அன்ன  -    ஏழு முழ
உயரமுள்ள   மதம்   செறிந்த   யானை   போன்ற;   இலக்குவன்
(இளையவனாகிய) இலக்குவன்; கவிகை ஏந்த -   வெண்   கொற்றக்
குடையைப்  பிடித்து  நிற்கவும்;  பாழிய மற்றைத் தம்பி - வல்லமை
மிக்க   இன்னொரு  தம்பி  (சத்துருக்கன்); பால் நிறக் கவரி பற்ற-
வெண்ணிறமான சாமரையை ஏந்தவும்; பூழியை அடக்கும் கண்ணீர்ப்
பரதன்
- இந்தப் புவியையே மறைக்கவல்ல உவகைக் கண்ணீர் சிந்தும்
பரதன்; கோல்   கொள்ள  - குதிரைகளை ஏவும் கோலைக் கொண்டு
செலுத்தவும்; போனான்- (இராமபிரான்) சென்றான்.
 

ஏழு முழம் உயர்ந்திருத்தல் பட்டத்து    யானையின்  சிறப்பு. புழுதி
என்பது மண்ணாதலின் பூமிஎனப் பொருள் பெற்றது.
 

(3)