பக்கம் எண் :

66யுத்த காண்டம் 

அழித்து முடிப்பதே அல்லால்; அத்தொழில் கட்டம்; இனிச்
செயும் கடமை செருத்தொழில்
- சமாதானத் தொழில் வருத்தம்
தருவதாகும், இனிச் செய்யத்தக்க கடமை போர்த் தொழிலை
மேற்கொள்வதே.
 

(51)
 

முட்டி - தாக்கி குலத்தொடு முடிக்குவது - முற்ற முடித்தல்,
கட்டம் - வருத்தம்.
 

9298.

என்று, எழுந்தனர் இராக்கதர், 'இருக்க நீ; யாமே

சென்று, மற்றவர் சில் உடல் குருதி, நீர் தேக்கி,

வென்று மீளுதும்; வெள்குதுமேல், மிடல் இல்லாப்

புன் தொழில் குலம் ஆதும்' என்று உரைத்தனர்,

போனார்.

 

என்று, எழுந்தனர் இராக்கதர் நீ இருக்க யாமே சென்று-
என்று   சொல்லிப்   படைத்   தலைவராகிய   இராக்கதர்கள்
எழுந்தவர்களாய் (இராவணனை நோக்கி) நீ இங்கு இருப்பாயாக
யாங்களே சென்று; மற்றவர்  சில்  உடல் குருதி நீர் தேக்கி
வென்று   மீளுதும்
-  அப்பகைவரின்   சிறிய உடலில் உள்ள
இரத்தத்தைக் குடித்து வென்று மீளுவோம்; வெள்குதுமேல்,
மிடல் இல்லாப் புன்தொழில் குலம் ஆதும்'
- அவர்களுக்கு
நாணிப்  பின்வாங்குவோமாயின்  வலிமை  இல்லாத சிறுதொழில்
செய்யும் குலத்தவர் ஆவோம்' என்று உரைத்தனர் போனார்-
என்று கூறியவர்களாய்ப் போயினர்.
 

சில் உடல் - சிறிய உடல் - அரக்கரை நோக்கச்
சிற்றுடல் பெற்றவர் மனிதர். வெள்குதல் இங்கு நாணிப்
பின்வாங்குதலைக் குறித்தது. மிடல் - வலிமை. புன்தொழில்
- வலிமையற்ற சிறு தொழில்.
  

(52)