பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள்725

சிறுமையே நோக்கார், தங்கள் பெருமையே சிந்தை

செய்யும்,

அறிவுடை மாந்தர்க்கு எல்லாம் அடைக்கலம் ஆக

வாழி.

(37-2)
 
1292.

வாழிய, சீர் இராமன்! வாழிய, சீதை கோமான்!

வாழிய, கௌசலேசை மணி வயிற்று உதித்த

வள்ளல்!

வாழிய, வலி மார்பும் மராமரம் ஏழும் சாய,

வாழிய கணை ஒன்று ஏவும் தசரதன் மதலை வாழி!

(37-3)
 
1293.

இராவணன்தன்னை வீட்டி, இராமனாய் வந்து

தோன்றி

தராதலம் முழுதும் காத்து, தம்பியும் தானும் ஆகப்

பராபரம் ஆகி நின்ற பண்பினைப் பகருவார்கள்

நராபதி ஆகி, பின்னும் நமனையும் வெல்லுவாரே.

(37-4)